“கோச்சடையான் மாதிரி ஆகிட கூடாதே”… மகளின் இயக்கத்தில் நடிக்க தயங்கும் ரஜினிகாந்த்?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடலூரில் ஜெயிலர் ஷூட்டிங்

கடலூரில் ஜெயிலர் ஷூட்டிங்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கடலூர் பகுதிகளில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், கடலூர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ரஜினியின் போட்டோக்களும் வெளியாகி வைரலாகின.

அடுத்தடுத்து இரண்டு படங்கள்

அடுத்தடுத்து இரண்டு படங்கள்

ஜெயிலர் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த இரண்டு படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தலைவர் 170, தலைவர் 171 ஆகிய படங்கள் லைகா தயாரிப்பில் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதில் ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தியும், இன்னொரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ரஜினி நடிப்பில் லைகா தயாரிக்கும் படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மகள் இயக்கத்தில் நடிக்க தயக்கம்

மகள் இயக்கத்தில் நடிக்க தயக்கம்

லைகா தயாரிக்கும் இந்த இரண்டு படங்களுக்கும் ரஜினி மொத்தமாக கால்ஷீட் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களில் ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவில்லை என்றும், அவர் வேறொரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் படத்தில் ரஜினியை கேமியோ ரோலில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா ஆர்வம் காட்டி வருகிறாராம். இதனையறிந்த ரஜினியோ தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

கோச்சடையான் மாதிரி ஆகிவிட்டால்?

கோச்சடையான் மாதிரி ஆகிவிட்டால்?

ஏற்கனவே இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படம் மிகப் பெரிய தோல்வியடைந்தது. அதனால், தற்போது ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடித்தால் மார்க்கெட் காலியாகி விடும் என அஞ்சுகிறாராம். ஆனால், ஐஸ்வர்யாவோ அப்பா ரஜினிகாந்தை சமாதானம் செய்து, தனது படத்தில் நடிக்க வைக்க சம்மதிக்க வைத்துவிட்டாராம். ஏற்கனவே தனுஷ் நடித்த '3', கெளதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' ஆகிய படங்களை ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இந்நிலையில், மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் தயங்கிய சம்பவம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X