Don't Miss!
- Finance
ரஷ்யாவை அசைக்க முடியாதோ.. சவால்களுக்கு மத்தியில் இப்படி ஒரு சாதனை..என்ன நடந்தது தெரியுமா?
- Sports
நியூசி.க்கு எதிராக சுப்மான் கில் சதம்.. கோலி, ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு.. புதிய நாயகனா கில் ?
- News
நீளும் கேள்விகள்.. ஜெயலலிதா உடலுக்கு எம்பாமிங் செய்தது யார்?.. ஆறுமுகசாமி அளித்த பரபரப்பு பதில்
- Automobiles
யூஸ்டு காரை வாங்கும்போது இந்த 5 தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! தலையில் நல்லா மொளகா அரைச்சிடுவாங்க...
- Lifestyle
இதுல உங்க பெருவிரல் எப்படி-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின சுவாரஸ்யமான விஷயத்தை சொல்றோம்...
- Technology
மீண்டும் ஒரு சூப்பரான ஸ்மார்ட்போனை கம்மி விலையில் களமிறக்கும் Redmi.!
- Travel
சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் – இனி காத்திருக்கும் நேரத்தில் படம் பார்க்கலாம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த்… ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து டிரெண்டாகும் போட்டோஸ்
கடலூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் இருந்து ரஜினியின் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்.. அப்போ சிபி சக்கரவர்த்தி படம்.. மகளின் விண்ணப்பம்?

ஜெயிலராக சூப்பர் ஸ்டார்
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்கள் மூலம் டைம்லைனில் வந்த நெல்சன் திலீப்குமார் 'ஜெயிலர்' மூலம் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, அனிருத் இசையமைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஜெயிலர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் யோகிபாபு, ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சரவணன், ஜெய் ஆகியோரும் கமிட் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜெயிலர் ஷூட்டிங் கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இப்போது கடலூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. அதில், ரஜினியும் கலந்துகொண்டுள்ளார்.

வைரலாகும் போட்டோஸ்
கடலூரில் நடந்து வரும் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படகங்கள் வெளியாகியுள்ளன. காரின் உள்ளே இருந்து ரஜினி கையெடுத்து கும்பிடும் போட்டோவும், கேரவன் அருகே ரசிகர்களை பார்த்து வணக்கம் சொல்லும் போட்டோவும் வெளியாகியுள்ளது. அதேபோல், ரசிகருடன் ரஜினி எடுத்துக்கொண்ட போட்டோ, இயக்குநர் நெல்சன் ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லும் போட்டோ ஆகியவையும் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ரஜினியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

விரைவில் புதிய அப்டேட்
ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருவதால், விரைவில் படப்பிடிப்பு நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் இருந்து ரஜினியின் தீம் இசையை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 'ஜெயிலர்' ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து வருவது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள இரண்டு படங்கள் குறித்த அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.