Don't Miss!
- News
இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு?
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
அதிரடியாக கூட்டணியை மாற்றிய ரஜினி... ஏமாற்றத்தில் இளம் இயக்குநர்கள்... இது எப்படி இருக்கு?
சென்னை:
சூப்பர்
ஸ்டார்
ரஜினி
நடித்து
வரும்
ஜெயிலர்
திரைப்படம்
தமிழ்ப்
புத்தாண்டு
ஸ்பெஷலாக
வெளியாகும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலரை
தொடர்ந்து
தனது
மகள்
ஐஸ்வர்யா
இயக்கும்
லால்
சலாம்
படத்தில்
நடிக்கவுள்ளார்
ரஜினி.
இந்தப்
படத்தை
தயாரிக்கும்
லைகாவுடன்
மேலும்
ஒரு
படத்தில்
அந்நிறுவனத்தின்
பேனரில்
நடிக்க
ரஜினி
ஓக்கே
சொல்லியுள்ளாராம்.
தலைவர்
171
படத்தின்
இயக்குநர்
யார்
என்ற
எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ள
நிலையில்,
தற்போது
புதிய
தகவல்
ஒன்று
கிடைத்துள்ளது.
ரஜினி
சார்
உடன்
விஜய்
அண்ணாவை
கம்பேரே
பண்ணக்
கூடாது..
வாரிசு
நடிகர்
ஷாம்
அதிரடி
கருத்து!

சாதிப்பாரா ஜெயிலர்
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் விமர்சன ரீதியாகவும் ஏராளமான நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் தான் கிடைத்தன. இதனால் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் 2023 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இருவரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியை மாற்றிய ரஜினி
ஜெயிலர் சூட்டிங் முடிந்ததும் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ரஜினியுடன் விஷ்ணு விஷால், விதார்த் இருவரும் லீடிங் கேரக்டர்களில் நடிக்கின்றனர். இதில் ரஜினி கேமியோ ரோலில் தான் நடித்து வருகிறார். இதனையடுத்து லைகா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் ரஜினி. தற்போதைக்கு 'தலைவர் 171' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் குறித்து தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன.

இளம் இயக்குநர்கள் ஏமாற்றம்
ரஜினியின் தலைவர் 171 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் சிபி சக்கரவர்த்தி அல்லது பிரதீப் ரங்கநாதன் இயக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. முக்கியமாக லவ் டுடே படம் மூலம் கவனிக்க வைத்த பிரதீப் ரங்கநாதன் தான் ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் என உறுதியான தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அவரும் இல்லை என்று கூறப்படுவதால் இளம் இயக்குநர்கள் இருவரும் சோகத்தில் உள்ளனர்.

மீண்டும் பழையக் கூட்டணி
கபாலி, காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த, ஜெயிலர் என தொடர்ந்து இளம் இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார் ரஜினி. இந்தக் கூட்டணியில் சில படங்கள் வெற்றிப் பெற்றாலும், படையப்பா, சிவாஜி போன்ற ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமையவில்லை. இதனால் இளம் இயக்குநர்களோட கூட்டணி வைக்கும் முடிவை ரஜினி கைவிட்டுவிட்டாராம். சந்திரமுகி படம் மூலம் மெஹா ஹிட் கொடுத்த பி வாசு உடன் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும் வரலாற்றுப் பின்னணியில் ஹிஸ்டாரிக்கல் ஜானர் படமாக இது இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வெளியாக வாய்ப்புள்ளதாம்.