twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கே.ஜி.எஃப் படத்துக்கு கிடைத்த அனுமதி.. சூப்பர்ஸ்டார் தர்பார் படத்துக்கு கிடைக்குமா?

    |

    சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் பட கட்-அவுட்டுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அனுமதி கோரப்பட்டுள்ளது.

    லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் வரும் ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது.

    கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படம் ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் தர்பார் படம் வெளியாகிறது.

    எவ்வளவு பணம் வாங்குனீங்க..? நீங்க இந்தியர் தானா..? கேள்விகேட்டவரை விளாசித்தள்ளிய நடிகை டாப்ஸி எவ்வளவு பணம் வாங்குனீங்க..? நீங்க இந்தியர் தானா..? கேள்விகேட்டவரை விளாசித்தள்ளிய நடிகை டாப்ஸி

    விமான விளம்பரம்

    விமான விளம்பரம்

    இந்தியளவில் தர்பார் படம் வசூல் ரீதியாக டார்கெட் செய்யப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் விளம்பரங்களையும் மிக பிரம்மாண்டமாக செய்து வருகிறது. கபாலி படத்திற்கு பிறகு தர்பார் படத்திற்கும் விமான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    டிக்கெட் புக்கிங்

    டிக்கெட் புக்கிங்

    நாளை மறுநாள் தர்பார் படம் வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் எல்லா தியேட்டர்களிலும் தீயாக விற்றுத் தீர்ந்து வருகிறது. தமிழ்நாட்டை போலவே, இந்தியா முழுவதும் தர்பார் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

    மீண்டும் நயன்தாரா

    மீண்டும் நயன்தாரா

    சந்திரமுகி, சிவாஜி (ஒரு பாடல்), குசேலன் படங்களை தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிகை நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் புரொமோக்களில் நயன்தாராவின் லுக்கும், அழகும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

    ஹெலிகாப்டர் பூமழை

    கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹெலிகாப்டரில் பூமழை தூவி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோன்று ரஜினியின் தர்பார் பட கட்-அவுட்டுக்கும் பூமழை தூவ சேலத்தை சேர்ந்த ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    அனுமதி கிடைக்குமா?

    அனுமதி கிடைக்குமா?

    சேலம் ஏ.ஆர்.எஸ் திரையரங்கில் தர்பார் படத்தின் முதல் காட்சி துவங்கும் போது ரஜினியின் தர்பார் பட கட்-அவுட்டுக்கு பூமழை தூவ ஆட்சியரிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதம் சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது. சிறப்பு காட்சிக்கு கிருஷ்ணகிரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஹெலிகாப்டருக்கு அனுமதி கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். அதிசயம், அற்புதம் நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Read more about: darbar தர்பார்
    English summary
    The fans in Salem have sought permission from Revenue Divisional Officer to shower flowers on the star’s cut-out from a helicopter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X