»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி:

நடிகர் ரஜினிகாந்த் புதுக்கட்சி தொடங்குவாரா? இல்லையா? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ரஜினி ரசிகர் மன்றத் தலைவர்சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

பரமக்குடியில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட சத்யநாராயணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மன்றங்கள் கலைப்பு:

தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றங்கள் கலைக்கப்படுகின்றன என்று வதந்தி கிளப்பி விட்டிருக்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. அது வெறும்வதந்தியே. எல்லா இடங்களிலும் ரஜினி ரசிகர் மன்றங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

ராஜ்குமார்:

ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டபோது அவர், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ரஜினி குரல் கொடுக்கவில்லை. ராஜ்குமார் தனது சகநடிகர் என்பதற்காகத் தான் குரல் கொடுத்தார்.

அவரிடம் கன்னடர் என்ற உணர்வு இருந்திருந்தால், பச்சைத் தமிழனான என்னை எப்படி அவரது ரசிகர் மன்றத் தலைவராக வைத்திருப்பார்?

புதுக்கட்சி:

ரஜினிகாந்த் புதுக்கட்சி தொடங்குவாரா? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பிற கட்சிகளுக்காகரஜினி பிரச்சாரம் செய்வாரா என்பது குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது.

அவர் பிரச்சாரம் செய்தால் நல்லது என்று அரசியல் கட்சியினர் விரும்புகின்றனர் என்றார் சத்யநாராயணா.

Read more about: fan, party, rajini, sathyanarayana, super star
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil