For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குப்பைத் தொட்டியில் கிடந்த பாகங்கள் துணை நடிகை உடையது: சினிமா ஆசையால் நாசமான வாழ்க்கை

By Siva
|
பெருங்குடி கொலையில் திடீர் திருப்பம்! பரபர பின்னணி!- வீடியோ

சென்னை: சென்னையில் சைகோ கணவனால் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சந்தியா ஒரு துணை நடிகை ஆவார்.

சென்னையை அடுத்து உள்ள பள்ளிக்கரணையில் குப்பை கொட்டும் இடத்தில் பெண்ணின் கை மற்றும் 2 கால்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா(37) என்பது தெரிய வந்தது.

சந்தியாவின் தலை இன்னும் கிடைக்கவில்லை. அவரை அவரின் கணவர் பாலகிருஷ்ணன் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. சினிமா ஆசையில் சென்னை வந்த சந்தியா சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

சினிமா

சினிமா

எனது சொந்த ஊர் தூத்துக்குடி டூவிபுரம் ஆகும். சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா மோகம் அதிகம். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியாவுக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு மாயவர்மன் என்ற மகனும், யோகமுத்ரா என்ற மகளும் உள்ளனர். மகன் பிளஸ்-1 வகுப்பும், மகள் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

தயாரிப்பு

தயாரிப்பு

4 ஆண்டுகளுக்கு முன் ‘காதல் இலவசம்' என்ற படத்தை இயக்கி, தயாரித்தேன். இந்த நிலையில் சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அதை நான் விரும்பவில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, என்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறி சந்தியா விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் விவாகரத்து செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

பெற்றோர்

பெற்றோர்

எங்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகமானதால் மகனையும், மகளையும் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் விட்டுவிட்டு சினிமா வாய்ப்புகளை தேடி மீண்டும் சென்னைக்கு வந்தேன். அப்போது எனது மனைவி சந்தியா சைதாப்பேட்டையில் பெண்கள் விடுதியில் தங்கி இருந்து ஆண் நண்பர்கள் மூலமாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டு இருப்பதாக அறிந்தேன்.

கண்டிப்பு

கண்டிப்பு

மேலும் சினிமா ஆசையால் அவரது நடவடிக்கைகளும் மாறி இருந்தன. இதனால் அவரை கண்டித்தேன். பின்னர் டிசம்பர் மாதம் ஊருக்கு சென்றுவிட்டார். பொங்கல் பண்டிகை முடிந்ததும் மீண்டும் சென்னை வந்தார். இதை அறிந்த நான், சந்தியாவை கடந்த 15-ந் தேதி வீட்டுக்கு அழைத்து வந்தேன். "நீ சினிமாவில் நடிக்க வேண்டாம். வீட்டிலேயே இரு. பிள்ளைகளை அழைத்து வந்து ஒன்றாக வாழலாம்" என்று கூறினேன்.

தகராறு

தகராறு

இந்த நிலையில், சந்தியா இரவு நேரத்தில் வெளியே செல்ல முயன்றார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கடந்த 19-ந் தேதி இரவு வெளியே செல்ல சந்தியா தயார் ஆனார். அப்போது, வெளியே செல்லக் கூடாது என்று கூறினேன். அதற்கு சந்தியா, "என் இஷ்டப்படி வாழ எனக்கு உரிமை இருக்கிறது" என்றார். இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, வீட்டில் இருந்த சுத்தியால் சந்தியாவின் தலையில் ஓங்கி அடித்தேன். இதனால் சந்தியா மயங்கி விழுந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, என்ன செய்வது என்று யோசித்தேன்.

உடல்

உடல்

யாரிடமும் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் உடலை துண்டு, துண்டாக வெட்டி பல இடங்களில் போட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். மறுநாள் 20-ந் தேதி அரிவாளால் கை, கால், தலை, உடல், இடுப்பு என துண்டு, துண்டாக உடலை கூறுபோட்டேன். அவற்றை 4 பார்சல்களாக கோணிப்பையில் போட்டேன். இடுப்பு முதல் தொடை வரையிலான பாகங்கள் அடங்கிய பார்சலை பாலத்தின் அடியிலும், தலை, உடல் பாகங்கள் கொண்ட 2 பார்சல்களை ஜாபர்கான்பேட்டையில் வெவ்வேறு குப்பை தொட்டிகளிலும் 2 கால், ஒரு கை கொண்ட பார்சலை கோடம்பாக்கம் குப்பை தொட்டியிலும் போட்டேன். பின்னர் வீட்டை சுத்தம் செய்து எதுவும் நடக்காதது போல், வழக்கமான வேலைகளை செய்து வந்தேன்.

கை, கால்கள்

கை, கால்கள்

இந்த நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள குப்பை தொட்டியில் போட்ட கை, கால்கள் போலீசாரிடம் சிக்கியதாக செய்தி பார்த்தேன். என்றாலும் என்னை பிடிக்க முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி பிடித்து விட்டனர் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.

English summary
Balakrishnan said that he killed his wife Sandhya as she is keen in acting in movies rather than taking care of the family.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more