காதலன் கொடுமை தாங்க முடியாமல் விமல் பட நடிகை தற்கொலை

By Siva

Recommended Video

Actress Yashika: பிரிந்து சென்ற காதலன்.. துணை நடிகை தற்கொலை- வீடியோ

சென்னை: காதலன் கொடுமை தாங்க முடியாமல் துணை நடிகை யாசிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பூரை சேர்ந்தவர் மேரிஷீலா ஜெபராணி என்கிற யாசிகா(21). துணை நடிகை. தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள அவர் விமலின் மன்னர் வகையறா படத்திலும் நடித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி நடித்து வந்தார் யாசிகா.

யாசிகா

யாசிகா

யாசிகாவுக்கும் செல்போன் சர்வீஸ் கடையில் வேலை பார்த்த பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்கிற மோகன்பாபுவுக்கும்(22) காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மோகன் பாபு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தற்கொலை

தற்கொலை

காதலன் பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த யாசிகா நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யாசிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு

வழக்கு

யாசிகாவின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்யும் முன்பு யாசிகா தன் அம்மாவுக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பியது தெரிய வந்துள்ளது.

அம்மா

அம்மா

நம்பி வந்த என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி கொடுமைப்படுத்திய மோகன்பாபுவுக்கு நான் இறந்த பிறகு சரியான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் அம்மா என்று யாசிகா வாட்ஸ்ஆப்பில் தனது தாய்க்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X