twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியன் 2 பட விவகாரம்.. உச்சநீதிமன்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்த உயர்நீதிமன்றம்!

    |

    சென்னை: இந்தியன் 2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளது.

    அசுரன் சொல்லும் அன்பே சிவம்...கமல் – வெற்றிமாறன் காம்போவை கமெண்ட் செய்த கஸ்தூரி அசுரன் சொல்லும் அன்பே சிவம்...கமல் – வெற்றிமாறன் காம்போவை கமெண்ட் செய்த கஸ்தூரி

    இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

    பெரும் எதிர்பார்ப்பு

    பெரும் எதிர்பார்ப்பு

    தேசிய விருது வென்ற இந்தியன் படத்திற்கு பிறகு 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷங்கர் - கமல் கூட்டணி இந்தியன் 2 படத்திற்கு இணைவதை அறிந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். பாதி படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், திடீரென படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது பெரும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

    கிடப்பில் போட்டாச்சு

    கிடப்பில் போட்டாச்சு

    இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் ஆரம்பித்த பிரச்சனை படத்தையே கிடப்பில் போடும் நிலைமைக்கு தள்ளியது. நடிகர் கமல் பிக் பாஸ், அரசியல், விக்ரம், பாபநாசம் 2 என பிசியாகி விட்டார்.

    அடுத்த படங்கள்

    அடுத்த படங்கள்

    இயக்குநர் ஷங்கரும் இந்த விவகாரத்தில் இருந்து விலகி அடுத்தடுத்த படங்கள் மீது கவனத்தை செலுத்த முடிவு செய்துள்ளார். டோலிவுட் நடிகர் ராம்சரணின் புதிய படத்தையும், ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக்கையும் இயக்க முடிவு செய்துள்ளார்.

    லைகா வழக்கு

    லைகா வழக்கு

    இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகக் கூடாது என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஏற்கனவே தனி நீதிபதி தெரிவித்திருந்தார்.

    Recommended Video

    Anniyan படத்தில் Vikram செய்த காரியம் தான் படத்தின் Highlight என்ன தெரியுமா? | Shankar
    பேச்சுவார்த்தையில் பலனில்லை

    பேச்சுவார்த்தையில் பலனில்லை

    இந்நிலையில் இரு தரப்பும் சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். ஆனால் அதில் தீர்வு எட்டப்படவில்லை என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மத்தியஸ்தர்

    மத்தியஸ்தர்

    அதில், இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மத்தியஸ்த பேச்சுவார்த்தை முடிந்து அதில் எடுக்கப்படும் முடிவை ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    English summary
    Supreme Court Judge R banumathi appointed as intermediator for Indian 2 case issue by Chennai High Court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X