»   »  சுராஜ் எப்படி அப்படி பேசலாம்: வந்துட்டாங்க 'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி

சுராஜ் எப்படி அப்படி பேசலாம்: வந்துட்டாங்க 'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை தமன்னா பற்றி இயக்குனர் சுராஜ் தவறான முறையில் பேசியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கத்தி சண்டை படம் வெளியாகியுள்ள நிலையில் இயக்குனர் சுராஜ் நடிகைகளின் ஆடை பற்றி சர்ச்சை பேட்டியளித்துள்ளார். தனது படத்தின் ஆடை வடிவமைப்பாளர் நடிகைகளுக்கு முழங்கால் வரை ஆடை கொடுத்தால் அதன் நீளத்தை குறைக்குமாறு கூறுவேன் என சுராஜ் தெரிவித்தார்.

இதையடுத்து சுராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமன்னா தெரிவித்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகை தமன்னா பற்றி இயக்குனர் சுராஜ் தவறான முறையில் பேசியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்களை ஆபாசமாக படத்தில் சித்தரிக்க வேண்டும் என்று அவர் நினைப்பது தவறானது என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

எந்த சர்ச்சை நடந்தாலும் சத்தமில்லாமல் ஒதுங்கியிருப்பவர் நயன்தாரா. ஆனால் அவரே சுராஜின் பேட்டியை பார்த்துவிட்டு கோபத்தில் கொந்தளித்துவிட்டார்.

நடிகைகள்

நடிகைகள்

சம்பளம் வாங்குவதால் நடிகைகள் என்பவர்கள் கேமரா முன்பு வந்து உடைகளை அவிழ்ப்பவர்கள் என்று சுராஜ் நினைக்கிறாரா? அவர் வீட்டு பெண்கள் பற்றி இப்படி பேச துணிச்சல் இருக்கிறதா என்று நயன்தாரா கேட்டுள்ளார்.

மன்னிப்பு

மன்னிப்பு

தனது பேச்சால் நடிகைகள் ஆளாளுக்கு கொந்தளிப்பதை பார்த்த சுராஜ் எதுக்கு வம்பு என்று மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனாலும் அவரை விடுவதாக இல்லை நடிகைகள்.

English summary
Director Suraj's interview about the length of actress' dress has irked actress Lakshmi Ramakrishnan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil