For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீதிபதி யார் சார்.. சுச்சியை சுழட்டி அடித்த சுரேஷ்.. இவர் போயிட்டா இதையெல்லாம் மிஸ் பண்ணுவோமே!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ஞாயிற்றுக் கிழமை எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகி பட்டையை கிளப்புகிறது.

  நீதிபதியாக சுச்சி செய்தது தவறு, கமல்ஹாசன் வருத்தம் | Bigg boss 4 Tamil

  சுரேஷ் தாத்தா தான் இந்த வாரம் வெளியேறுகிறார் என்பதற்காக, முதல் புரமோவிலேயே பிக் பாஸ் எடிட்டர் அவரை ஹைலைட் செய்துள்ளார்.

  உலகிலேயே மெஜாரிட்டி பார்த்து தீர்ப்பு சொன்ன நீதிபதி சுசித்ராவை இன்னைக்கு கமல் வச்சு செய்ய போறார் என்பது தெளிவாகி உள்ளது.

  ட்விஸ்ட்.. கமல் சொன்ன அந்த விசயம்.. இன்னைக்கு எவிக்ஷன் இருக்கா? இல்லையா? தாத்தா சேவ் ஆனா ஹேப்பி!

  யாரையும் சேவ் பண்ணல

  யாரையும் சேவ் பண்ணல

  இந்த வாரம் பிக் பாஸ் வீக்கெண்ட் நிகழ்ச்சி கமல் பிறந்தநாள் நிகழ்ச்சியாக மாறியது. சனிக்கிழமையான நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில், கமல்ஹாசன் யாருக்குமே பிறந்தநாள் ஆஃபர் கொடுக்கவில்லை. யாரையுமே சேவ் பண்ணல, 7 போட்டியாளர்களில் யார் வெளியே போறாங்க என்பதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

  முதல் புரமோ

  முதல் புரமோ

  இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. நேற்று தீர்க்கப்படாத விஷயங்களையும் கமல் இன்னைக்கு பஞ்சாயத்து பண்ணி தீர்க்க ரெடியாக கிளம்பி வந்து விட்டார். நீதிமன்ற நிகழ்வுகளை பற்றி இன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விவாதிக்கப்படும் என்பதற்கு ஏற்ப முதல் புரமோ அமைந்துள்ளது.

  கை தூக்குங்க தீர்ப்பு சொல்றேன்

  கை தூக்குங்க தீர்ப்பு சொல்றேன்

  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நீதிமன்றம் செட் போடப்பட்டு புது வரவான சுசித்ராவை நீதிபதியாக உட்கார வைத்தனர். அவரும் விவாதங்களை எல்லாம் கேட்டு பாயின்ட்டை எல்லாம் நோட் பண்ணி எழுதியதாக சீன் போட்டார். ஆனால், ஒவ்வொரு வழக்கின் இறுதியிலும், கை தூக்க சொல்லி மெஜாரிட்டி பார்த்து தீர்ப்பு சொன்னதால், சமூக வலைதளங்களில் நல்லாவே விமர்சிக்கப்பட்டார்.

  நீதிபதி யார் சார்

  நீதிபதி யார் சார்

  இன்றைய முதல் புரமோவில் இந்த கேசுக்கும் நீதிபதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? என கமல் கேட்க, நீதிபதி யார் சார்? என சுரேஷ் தாத்தா தனது குசும்பை ஆரம்பித்தார். கேப்டன் சம்யுக்தாவை எல்லாம் கேட்டு சுசித்ரா பேசியதில் இருந்தே கடுப்பாகி இருக்கும் சுரேஷ், இதுதான் சரியான சான்ஸ் என சுச்சியை பங்கம் பண்ணி விட்டார்.

  கடைசி வெடி

  கடைசி வெடி

  இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி தான் வெளியே போகப் போகிறார் என்பது வழக்கம் போல முன்கூட்டியே தெரிந்து விட்டது. இந்நிலையில், இது தான் சுரேஷ் தாத்தாவின் கடைசி வெடி இந்த பிக் பாஸ் வீட்டில் என்றும், அவரை ரொம்பவே மிஸ் செய்வதாகவும் ரசிகர்கள் புரமோவை பார்த்து புலம்பி வருகின்றனர்.

  ரியோவின் லீலை

  ரியோவின் லீலை

  நிஷா அக்காவை பத்தி சுச்சி வந்த உடனே சொன்ன தப்பான மேட்டரை, அவங்களை வச்சே கேம் ஆடி கவுக்க, ரியோ போட்ட வழக்கில் நிஷா ஜெயித்தது குறித்தும் கமல் கேட்டார். உடனடியாக கமல் சாரையே கோர்த்து விட பார்த்து விட்டார் சுசித்ரா, நீங்க சொல்லித்தான் அப்படி செஞ்சேன் என சொன்னதும் கமல் பதறி போய்விட்டார்.

  ஷேக் பண்றேன்

  ஷேக் பண்றேன்

  பிக் பாஸ் நிகழ்ச்சியை குவாரண்டினில் இருக்கும் போது பார்த்தேன், எல்லோரும் கொஞ்சம் சேஞ்ச் ஆயிட்டாங்கன்னு தெரியுது, உள்ளே போய் ஒரு ஷேக் பண்ணி எல்லாரையும் பழையபடி மாத்திக் காட்டுறேன் என சுசித்ரா சொல்லி உள்ளே சென்று விட்டு, உங்க கிட்ட வந்த வார்த்தைகள் தான் என அவருக்கே கொக்கிப் போட்டு கோர்த்து விட்டார். நல்லா ஷேக் பண்றியேம்மா!

  சாட்சிகள் நீங்க தான்

  சாட்சிகள் நீங்க தான்

  நீதிமன்ற வழக்கு டாஸ்க் கடைசியில் கமலுக்கும் சுசித்ராவுக்கும் இடையேயான வழக்காக மாறிவிட்டது. அது என்னோட கருத்து இல்லை, உங்களோடது தான் எனக் கூறும் கமல், பதறிப் போய், அப்பா.. அதற்கு சாட்சிகள் நீங்க தான் என மக்களிடம் கை காட்ட அட்டகாசமாய் முடிகிறது புரமோ!

  English summary
  Bigg Boss Tamil season 4 Day 35 promo 1 out now. Kamal Haasan asked about Suchitra judgement. Suresh Chakaravarthy roasts Suchitra in a very funny way.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X