For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெளிய வந்தா உனக்கு நல்ல வேலை இருக்கு.. சூடேற்றிய மொட்டை… சூடாகாமல் ஜெயிச்ச ரியோ!

  |

  சென்னை: இம்சை அரசனாக கெட்டப் போட்டுக் கொண்டு கலக்கிய ரியோ ராஜ், நேற்றைய டாஸ்க்கிலும் வென்று அசத்தினார்.

  அரக்கர்கள் வேஷம் போட்ட மற்ற போட்டியாளர்கள் எல்லாம், சும்மா கலாய்த்த நிலையில், உண்மையிலேயே சுரேஷ் தான் தனது அரக்கனை வெளியே எடுத்து விட்டு ஆடினார்.

  நிச்சயம் இந்த வாரம் அது பெரிய பிரச்சனைகளை பிக் பாஸ் வீட்டில் உருவாக்கும் என்பதை உறுதி செய்கிறது.

  பாலாஜி போட்ட சண்டையெல்லாம் புஸ் ஆகிடுச்சே.. சனம் அளவுக்கு உன்னால டாஸ்க்ல ஜெயிக்க முடியலயேப்பா!

  கில்லாடி சனம்

  கில்லாடி சனம்

  பிக் பாஸ் தர்ஷனையே அந்த அளவுக்கு வெளிய வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி, உள்ளே விளையாட்டில் சும்மாவா இருப்பார். தனது மொத்த கில்லாடி தனத்தையும் எதிரிகள் என்னவெல்லாம் சூழ்ச்சி செய்வார்கள் என்பதை முன்னாடியே மனதுக்குள் ப்ளூ ப்ரின்ட் போட்டு விளையாடி அசத்தினார்.

  சும்மா உடம்பை காட்டத்தான்

  சும்மா உடம்பை காட்டத்தான்

  சனம் ஷெட்டிக்கு பிறகு அரக்கர்களிடம் சென்ற சோமசேகர் மற்றும் பாலாஜி முருகதாஸ், போன வேகத்திலேயே அவுட்டாகி அரக்கர்களாக மாறிவிட்டனர். ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை. சும்மா பாடி காட்டி நிற்கத்தான் இவர்கள் லாயக்கு என ரசிகர்கள் பங்கமாக சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

  சக்சஸ் பண்ண சம்யுக்தா

  சக்சஸ் பண்ண சம்யுக்தா

  அப்பாடா ஒரு வழியா சம்யுக்தா நேற்றைய போட்டியில் தான் ஒழுங்கா விளையாடினாங்க என ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளார். சனம் ஷெட்டியை போலவே, இவரும் சிலையாகவே மாறி, சங்கு ஊதி பிக் பாஸ் சொன்னதுக்கு அப்புறம் தான் அசைந்து, அரக்கர் கூட்டத்தை கதற விட்டாங்க.

  வேற லெவல் மைண்ட் கேம்

  வேற லெவல் மைண்ட் கேம்

  சனம் ஷெட்டி சொன்ன அத்தனை இன்புட்களையும் கேட்காதவர் போல காமெடி பண்ணிட்டு, நிஷாவை வாயை மூடு தாயே என ஓட்டிக்கிட்டு இருந்தாலும், செம ஷார்ப்பாக வேற லெவல் மைண்ட் கேமை நடிகர் ரியோ ராஜ் ஆடினார். சிரிச்சா போச்சு மாதிரி, இது அசைஞ்சா போச்சு விளையாட்டு என்பதால், இவரும் சிலையாகவே மாறி விட்டார்.

  சூடேற்றிய சுரேஷ்

  சூடேற்றிய சுரேஷ்

  டி.ஆர். ராஜேந்தர் போலவே வாயிலயே ஏகப்பட்ட வித்தைகளை வைத்துக் கொண்டு, மியூசிக் போட்டும், டோப்பாவை கழட்டி முகத்துக்கு நேராக காட்டியும் செம டார்ச்சர் பண்ணார் சுரேஷ். எல்லாத்துக்கும் மேல வெளிய போனா உனக்கு அந்த இடத்துல நிக்குற சூப்பர் வேலை இருக்கு என தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டு ரியோவை ரொம்பவே சூடேற்றினார்.

  மீசைக்குள் மூக்கு விட்ட அர்ச்சனா

  மீசைக்குள் மூக்கு விட்ட அர்ச்சனா

  அரக்கர்கள் கெட்டப்பை அணிந்து கொண்டு சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு எக்ஸ்ட்ரீமில் விளையாடினார் என்றால், அனிதாவும் அர்ச்சனாவும் தான் பெண்கள் சைடில் நல்லா விளையாடினார்கள். அதிலும், அந்த இம்சை அரசன் மீசைக்குள் எல்லாம் மூக்கை விட்டது போல அர்ச்சனா நெருங்கி வந்து மூஞ்சை காட்டி அப்படி பயமுறுத்தினார்.

  சூடாகாமல் ஜெயித்த ரியோ

  சூடாகாமல் ஜெயித்த ரியோ

  நீங்க நோண்டிக்கிட்டே இருப்பீங்க அவரு சும்மா வந்துகிட்டே இருப்பாரா? என முன்னதாக மொட்டை தாத்தா சுரேஷை வெளுத்து வாங்கிய பழியை மொத்தமாக தீர்க்கும் அளவுக்கு இந்த டாஸ்க்கை சுரேஷ் பயன்படுத்திக் கொண்டார். ஆனால், கொஞ்சம் கூட சூடாகாமல் ஆடாமல் அசையாமல் சிலையாக இருந்து ரியோ ராஜ் வின் பண்ணிட்டாரு!

  Bigg Boss 4 Tamil • Bigg Bossகு வேற வேலை இல்லையா? | Rio Suresh சண்டை
  அனிதாவுக்கே பிடிக்கல

  அனிதாவுக்கே பிடிக்கல

  சனம், சோம்ஸ், பாலாஜி, சம்யுக்தா மற்றும் ரியோவுடன் சொர்க்கபுரி vs மாயபுரி டாஸ்க் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. இன்று, ரம்யா பாண்டியன், வேல் முருகன், நிஷா உள்ளிட்டோர் அரக்கர்களிடம் தப்பிக்கிறார்களா இல்லையா என்பதை பார்க்கலாம். சம்யுக்தாவை கிண்டல் செய்யும் போது கூட சனம் ஷெட்டி ரொம்ப அழுத்தக்காரி, நீ அப்படி இல்லையே பாப்பா என சம்யுக்தாவிடம் பேசியதை ஆரியிடம் புகார் செய்த அனிதா தனக்கு கொஞ்சம் கூட சுரேஷ் விளையாடியது பிடிக்கல என ஓப்பனாக சொன்னார்.

  English summary
  Suresh Chakaravarthy teases Rio Raj personally using Good and Evil task. But Rio Raj calmly hesitate all the things and win his task.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X