For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கமல் படிச்சு படிச்சு சொன்னாரு… தப்பா ஓட்டுப் போட்டுட்டீங்களே மக்கா.. மொட்டை அராஜகம் ஆரம்பம்!

  |

  சென்னை: பந்து கிடைக்காமல் போன காரணத்திற்காக ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த கேப்டன் பதவி குறித்து, அவரையே பேச சொல்லி ஆரம்பமே அசறடித்தார் கமல்.

  அடுத்த வாரத்திற்கான கேப்டனையும் ஹவுஸ்மேட்களே தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை இந்த முறை வழங்கினார்.

  இடையில் டபுள் மீனிங்கில் பேசவில்லை, ஸ்ட்ரெய்ட்டாவே சொல்றேன், சரியான தலைவரை தேர்ந்தெடுங்க என அரசியல் பேசியதும் சிக்ஸர் தான்.

  நான் பத்ரகாளி ஆகமாட்டேன்.. இங்கேயும் முத்த பிரச்சனை தீரலையா.. ரேகாவின் ஹார்ட் சீன் செம!

  முதல் வார கேப்டன்

  முதல் வார கேப்டன்

  கலர் கலர் பந்துகள் போடப்பட்டதும், ஒவ்வொரு போட்டியாளரும் ஓடிப் போய் ஆளுக்கொன்றை எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த ஆரம்ப விளையாட்டைக் கூட சரியாக ஆடாமல் பந்தை எடுக்காத ரம்யா பாண்டியனுக்கு கேப்டன் பதவியை பிக் பாஸ் சட்டென தூக்கிக் கொடுத்தது சக போட்டியாளர்களையே ஆச்சர்யப்பட வைத்தது.

  கேப்டன் இருந்த மாதிரியே தெரியல

  கேப்டன் இருந்த மாதிரியே தெரியல

  முதல் வார முடிவில் பேசும் போது, சுரேஷ் சக்கரவர்த்தி கேப்டன்னு ஒருத்தர் இருந்த மாதிரியே தெரியலயே என தனது கருத்தை தேகாய் உடைப்பது போல சொல்லி இந்த முறையும் தான் ஒரு ஸ்வாக் ஆன ஆளு என கெத்துக் காட்டினார். அது நிச்சயம் ரம்யா பாண்டியனை பாதித்து இருக்கும்.

  உங்க தப்பு என்ன

  உங்க தப்பு என்ன

  முதல் வார கேப்டன் ரம்யா பாண்டியனிடம், புகார் பெட்டியில் மற்றவர்கள் பெயருடன் எழுதிய புகார்களை பொறுமையாக படித்துப் பாருங்கள் என்று கூறிய கமல், நீங்க செஞ்ச தப்பு என என்ன நினைக்கிறீங்க என கேட்டதும், ஒண்ணுமே இல்லையே என்று சொல்லாமல், பதவி கிடைத்ததே தனக்கு ஷாக்கிங்காத் தான் இருந்தது. ஒவ்வொரு டீமையும் பிரிக்கும் போது, அதற்கான கேப்டன்களை நான் தேர்வு செய்திருந்தால், பிரச்சனை வரும் போது அவர்களிடம் பேசி தீர்த்து இருக்கலாம் அது நான் செஞ்ச தப்பு என அவரும் ஒப்புக் கொண்டார்.

  கமல் பாராட்டு

  கமல் பாராட்டு

  நீங்க ஒரு மோசமான தலைவர், தலைவர் பதவிக்கே லாயக்கு இல்லை என சொல்ல மாட்டேன். அப்படி இருந்தா உங்க தப்பை நீங்களே ஒப்புக் கொண்டு இருக்க மாட்டீங்க, புகார்களை படித்த பின்னர், அடுத்த தலைவருக்கு, அந்த தவறுகளை செய்ய வேண்டாம் என அறிவுரை கூறுங்கள் எனக் கூறிவிட்டு, அடுத்த தலைவரை தேர்வு செய்ய நகர்ந்து விட்டார்.

  அதிக ஹார்ட் பிரேக்

  அதிக ஹார்ட் பிரேக்

  ஒரு சேஞ்சுக்கு, அதிக ஹார்ட் பிரேக் வாங்குன ஷிவானி நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகாவை அழைத்து இவங்க மூணு பேர் தான் அடுத்த வார தலைவருக்கான நாமினி, இவங்களுக்கு ஓட்டு போடுங்க என பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கமல் கூற எல்லாரும் ஷாக் ஆனார்கள். நடிகை ரேகா தான் ஏன் தலைவர் ஆகவேண்டும் என்பதை விளக்கினார். மற்ற இருவரும், அது போட்டியாளர்கள் விருப்பம் என்று சூப்பராக சொன்னார்கள்.

  ஸ்கோர் பண்ண சுரேஷ்

  ஸ்கோர் பண்ண சுரேஷ்

  முதல் வாரம் முழுவதும் செமயா கேம் விளையாடி மக்கள் மனதை பிடித்த சுரேஷ் சக்கரவர்த்தி ஹவுஸ் மேட்ஸ்கள் 7 ஹார்ட் பிரேக் கொடுத்தாலும், அதிக பேர் ஓட்டு போட்டு அவரைத் தான் ஜெயிக்க வைத்தாங்க, ரேகா அவ்வளவு பேசியும், கன்னத்துலலாம் முத்தம் கொடுத்தும், ரெண்டு ஓட்டுத் தான் வாங்குனாங்க, ஷிவானிக்கு 3 ஓட்டு கிடைச்சது.

  பதவி கிடைச்சதும்

  பதவி கிடைச்சதும்

  கேப்டன் பதவி கிடைச்சதும் அதிரடியாக சுரேஷ் சக்கரவர்த்தி தலைமை பொறுப்பை எடுத்துக் கொண்டு, மூடியிருக்கிற இன்னொரு பாத்ரூமையும், பெட்ரூமையையும் உடனே திறக்கணும் என்றார். உணவு வீணாவது, கேஸ் வீணாவது எல்லாத்தையும் கட்டுப் படுத்தினால், சில லக்ஸரிகளை விட்டுக் கொடுத்தால், அந்த அறை திறக்கப்படும் என்றார்.

  கமல் பேசிய அரசியல்

  கமல் பேசிய அரசியல்

  பிக் பாஸ் வீட்டுக்கு தலைவரை தேர்வு செய்கிறாரோ இல்லையோ, அடுத்து வர எலக்‌ஷனுக்கு நல்லா ஓட்டு கேட்கிறார் கமல்ஹாசன் என அவர் பிக் பாஸ் வீட்டில் பேசும் அரசியல் வசனங்களை கேட்கும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த தலைமை என்பது அது அதிகாரம் இல்லை, அது பொறுப்பு, அதை விட்டு விட்டு செங்கோலை எடுத்துக் கொண்டு சுத்துவது சரி கிடையாது என பக்காவாக இந்த முறையும் அரசியல் நெடியை அள்ளி வீசியுள்ளார்.

  English summary
  First week captain Ramya Pandian talks about her mistakes. Housemates choose next week captain as Suresh Chakaravarthy in a democratic way.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X