For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வீட்டை விட்டே போறேன் பிக் பாஸ்.. அசிங்கப்படுத்திய சனம்.. அதிரடி முடிவெடுத்த சுரேஷ்.. அழுதுட்டாரு!

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேறுகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி என கிடைத்த தகவல் கிட்டத்தட்ட உண்மையாகி உள்ளது.

  Bigg Boss Tamil Season 4 | Promo 3 | Day 17

  கடந்த இரு நாட்களாக நடந்த நாடா? காடா? டாஸ்க் ஏகப்பட்ட சண்டைகளையும், சர்ச்சைகளையும் ஹவுஸ்மேட்கள் இடையே உருவாக்கியது.

  எல்லாத்துக்கும் மேல சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தி அடிச்சிட்டாருன்னு சொல்லி அசிங்கப்படுத்தி திட்டியது அவரை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

  தொடத் தான் கூடாது.. மத்தபடி 4 சென்ஸ் வச்சு விளையாடலாம்.. மாஸ்டர் பிளான் போட்ட ரம்யா பாண்டியன், ரியோ!

  பாலாஜி பஜ்ஜி

  பாலாஜி பஜ்ஜி

  பூனையை அடிச்சா பாவம் ஆனால், அது பண்ணுறதெல்லாம் சேட்டைன்னு சொல்லுவாங்க, அதே போலத்தான் பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் தாத்தாவும், வயதானவர் என்று பார்த்தால், பொடிப்பயன் ஆஜீத் வரைக்கும் இறங்கி வந்து சண்டை போடுறாரு.. நேற்றைய எபிசோடில் பாலாஜி பஜ்ஜி.. பஜ்ஜிக்குள்ள சொஜ்ஜி என ஆரம்பத்திலேயே பாலாஜியை கிண்டல் அடித்தார்.

  சனம் பேய்

  சனம் பேய்

  அதுமட்டுமின்றி, இது தான் சாக்கு என ரியோ பேய், ரம்யா பேய் மண்டையில குட்டணும், சனம் பேய் என அரசன் வேடம் அணிந்தாலும், தனக்கு உள்ளே இருக்கும் அரக்கனை தாராளமாகவே வெளியிட்டு விளையாடினார். அப்பவே வெளியே வா மன்னா.. என்ன சைலன்ட்டா உள்ளே போய் ஒளிஞ்சிக்கிட்ட என சனம் ஷெட்டியும் அவரை வம்பிழுத்தார்.

  அடங்கி இருக்க சொன்ன அர்ச்சனா

  அடங்கி இருக்க சொன்ன அர்ச்சனா

  சுரேஷ் சக்கரவர்த்தியின் சேட்டைகளை எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே ராஜமாதாவாக வேடமிட்டு இருந்த அர்ச்சனா அக்கா தான் தடுத்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் சுரேஷை அடக்க அவர் மீது எகிறவும் செய்தார். அதையும் பொருட்படுத்தாமல் விளையாடியதால் உருவான பிரச்சனையால் தான் சனம் ஷெட்டியிடம் சுரேஷை மன்னிப்பு கேட்க அதட்டினார் அர்ச்சனா.

  வெத்துவேட்டு வேல்முருகன்

  வெத்துவேட்டு வேல்முருகன்

  ஷிவானி நாராயணனே நேற்றைய போட்டியில் செமயா விளையாடினாங்க.. அரச குல தலைவர் பதவி கிடைத்தும் சீப்பான சில மொக்கை காமெடிகளை மட்டுமே பண்ணிவிட்டு, எதுவுமே செய்யாமல் வெத்துவேட்டாக இருந்தார் வேல்முருகன். சுரேஷ் ஆடிய அளவில் கொஞ்சம் கூட அரக்கனாக அவர் விளையாடவில்லை.

  ரியோ பிளானா?

  ரியோ பிளானா?

  நிஷா அக்காவை அடிக்கடி அடித்து விளையாடும் சுரேஷ் சக்கரவர்த்தி அருகே, சனம் ஷெட்டியை அனுப்பினால், நிச்சயம் பிரச்சனை வரும் என்று ரியோ ராஜ் எதிர்பார்த்தபடியே, சனம் ஷெட்டியை அங்கே போய், கருப்பு துணியை வைத்து மறைத்தபடி நிற்க சொன்னார். சுரேஷ் தாத்தா லேசாக இடித்த உடனே உயிரே போய்விட்டது போல சனம் ஷெட்டியும் சண்டை பிடித்து விட்டார்.

  அசிங்கப்படுத்திய சனம்

  அசிங்கப்படுத்திய சனம்

  ஆரம்பத்தில் இருந்தே சுரேஷ் சக்கரவர்த்தி பண்ண எல்லாத்தையும் மனதில் வைத்துக் கொண்டும், சம்யுக்தா டாஸ்க் செய்யும் போதும், சனம் பற்றி அழுத்தக்காரி என அவர் பேசியது எல்லாத்தையும் வச்சு, மொட்டை தாத்தா சுரேஷ், விளையாட்டா அடிச்ச உடனே, அய்யோ, அப்பான்னு கத்தி கூப்பாடு போட்டு, வலியில் துடிக்காம, என்னை எப்படி நீ அடிப்ப, ஏய் வெளிய வாடா, என் மண்டையில அடிக்க நீ யாருடா என கொஞ்சமும் வயசுக்கு மரியாதை கொடுக்காமல் பழிக்கு பழி தீர்த்து விட்டார். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  வீட்டை விட்டு போறேன் பிக் பாஸ்

  வீட்டை விட்டு போறேன் பிக் பாஸ்

  மத்தவங்கள கார்னர் பண்ணியும், கொளுத்தி போடும் போதும், கேமாக தெரியும் சுரேஷுக்கு, சனம் ஷெட்டி பண்ணதும் கேமாக தெரியாமல், தன்னை டைரக்டா பாதித்ததை நினைத்து கன்ஃபெஷன் ரூமில் அழத் தொடங்கினார். பின்னர், பிக் பாஸிடம் தான் இந்த வீட்டை விட்டே போறேன், தான் செஞ்சது ரொம்ப தப்பு, என்னை எலிமினேட் பண்ணி இதை ஒரு ரோல் மாடல் ஆக்குங்க பிக் பாஸ் என கதறி அழுதார்.

  பார்க்கவே பாவமா ஆகிடுச்சு

  பார்க்கவே பாவமா ஆகிடுச்சு

  என்னதான் சுரேஷ் சக்கரவர்த்தி கிண்டல் பண்ணும் போதும், மற்றவர்களை டீஸ் பண்ணும் போதும் ஜாலியா இருந்தாலும், வயதானவரை அவமானப்படுத்தியதை ரசிகர்கள் ஒரு போதும் ஏற்கவில்லை. மேலும், கன்ஃபெஷன் ரூமில் மனம் வெடித்து கதறி கதறி அழுத சுரேஷ் சக்கரவர்த்தியை பார்க்கவே பாவமா ஆகிடுச்சு..

  வெளியேறினாரா?

  வெளியேறினாரா?

  பரபரப்பான தகவல் வெளியானது போலவே சுரேஷ் சக்கரவர்த்தியும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிக் பாஸிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், நம்ம மெகா வில்லன் பிக் பாஸ் அதெல்லாம் எப்படி உடனே விட்டு விட முடியும், இந்த சீசன்ல உங்களை வச்சித் தான் இன்னும் பல சம்பவங்களையும், சண்டைகளையும் உருவாக்கணும் என மன்னிப்பு கேட்டுட்டீங்கள, உங்களுக்கு எது சரியென படுதோ அந்த கேமை விளையாடுங்கன்னு அனுப்பி வச்சிட்டாரு..

  ஒன் சைடு அர்ச்சனா

  ஒன் சைடு அர்ச்சனா

  நேற்றைய பிக் பாஸ் எபிசோடை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனா பண்ணது கொஞ்சம் கூட கரெக்ட் இல்லை. சுரேஷ் சக்கரவர்த்தியை மட்டுமே டார்கெட் பண்ணாரு, சனம் ஷெட்டி ஏன் அப்படி மரியாதை குறைவா திட்டுனாங்கன்னு ஒரு வார்த்தை கூட அர்ச்சனாவோ, மற்ற போட்டியாளர்களோ கேட்கல, கேபியும், பாலாஜியும் கூட அமைதியா இருந்தாங்க என கண்டபடி திட்டித் தீர்த்து சுரேஷ் சக்கரவர்த்திக்கு தங்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

  English summary
  Suresh Chakaravarthy wants to quit Bigg Boss Tamil 4 after Sanam Shetty scolded him very rudely and also Archana and other housemates targeting Suresh Chakaravarthy and forced him to ask sorry to Sanam.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X