காயங்களை பொருட்படுத்தாமல் உழைக்கும் அஜித்.. வலிமை அப்டேட் குறித்து சுரேஷ் சந்திரா அறிக்கை!

சென்னை: தல அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் தகுந்த நேரத்தில் வரும் பொறுமையுடன் காத்திருங்கள் ரசிகர்களே என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை கிளப்பி உள்ளது.

தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. மேலும், இன்று தளபதி 65 படத்தின் அசத்தலான அப்டேட் வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் மீண்டும் அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை மூண்டது.

வலிமை அப்டேட் வேண்டும் என அஜித் ரசிகர்கள் நெருக்கடி கொடுத்ததன் விளைவாக இப்படியொரு அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

நீண்ட காத்திருப்பு

நீண்ட காத்திருப்பு

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த ஒரு அறிவிப்பை தவிர வேற எந்த அப்டேட்டும் ரசிகர்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக கிடைக்காத நிலையில், ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட வலிமை படமும் கொரோனா காரணமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போயுள்ளது.

அஜித்துக்கு காயம்

அஜித்துக்கு காயம்

வலிமை படத்தின் ஷூட்டிங்கில் ஏகப்பட்ட காயங்களை பட்டாலும், ரசிகர்களுக்காக ஓய்வெடுக்காமல் தல அஜித் தொடர்ந்து ஷூட்டிங் செய்து வருகிறார் என்றும் ரசிகர்களை அமைதியாக்கும் வார்த்தைகளை தற்போது சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.

தளபதி 65 அறிவிப்பு

தளபதி 65 அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 65வது படம் உருவாக போகிறது என்கிற அறிவிப்பு இன்று வெளியான நிலையில், வலிமை பட அப்டேட்டை கேட்டு அஜித் ரசிகர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். அதன் விளைவாக இந்த அறிக்கையை தற்போது சுரெஷ் சந்திரா வெளியிட்டுள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அஜித்தும் போனிகபூரும் ஆலோசித்து

தல அஜித்தும் தயாரிப்பாளர் போனி கபூரும் ஆலோசித்து வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை தகுந்த நேரத்தில் தல ரசிகர்களுக்காக கொடுப்பார்கள், அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்கிற செய்தியையும் சுரேஷ் சந்திரா தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

வெயிட் பண்றோம்

வெயிட் பண்றோம்

எப்ப வந்தாலும் வலிமை படத்தின் அப்டேட் சமூக வலைதளங்களை நிச்சயமாக வேற லெவலில் தெறிக்கவிடும். கண்டிப்பா வெயிட் பண்றோம் என அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்பவே ரொம்ப லேட் ஆகிடுச்சு, நியூ இயருக்கு ஏதாவது பார்த்து பண்ணுங்க என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X