»   »  'வெளிநாட்டில் ஒளிந்து கொண்டு எங்கள் முதல்வர் பற்றி அவதூறு பரப்புவதா?'- சுரேஷ் காமாட்சி

'வெளிநாட்டில் ஒளிந்து கொண்டு எங்கள் முதல்வர் பற்றி அவதூறு பரப்புவதா?'- சுரேஷ் காமாட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபகாலமாக ஒருவர் நலமுடன் இருக்கும்போதே அவர் உயிருடன் இல்லை என்பது போன்ற தகவலை பரப்புவது வெகுவாக பெருகிவிட்டது. கவுண்டமணி அவர்களையும் கே ஆர் விஜயா அம்மாவையும் இதோடு ஆறாவது முறையாக கொன்றுவிட்டார்கள். இது என்ன மனநிலைன்னு தெரியவில்லை.

நலம். நலமறிய ஆவல் என கடிதமெழுதி இன்னொருத்தரின் நலத்தை மட்டுமே விரும்பும் இனத்தில் பிறந்த மானத் தமிழன் இன்று அடுத்தவரின் இருப்பை இறப்பென்று வதந்தி பரப்புவதில் அவ்வளவு வேகமாக இருக்கிறான். அதுவும் இந்த மானத் தமிழச்சிக்கு தான் ஒரு உலக துப்பறியும் சிங்கம் என்ற நினைப்பு போலும்.

Suresh Kamatchi condemns rumour mongers on CM

வெளிநாட்டில் ஒளிந்துகொண்டு இங்கு எங்கள் முதல்வரின் உடல்நிலை பற்றி தவறானச் செய்தியை பரப்பி வருவதும் எம் மக்கள் மத்தியில் வருந்தக்கூடிய மனநிலையை ஏற்படுத்துவது கண்டிக்கவும் தண்டிக்கவும் கூடிய செயல்.

உண்மைக்குப் புறம்பாக செய்தியை வெளியிடுவது அதுவும் ஒரு முதல்வர் பற்றிய செய்தியை வெளியிட்டது கொதிப்படையச் செய்கிறது. இத்தோடு வதந்தி பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

சிகிச்சையில் உள்ள முதல்வர் விரைவில் சிங்கமாய் வீடு திரும்புவார். மீதமுள்ள ஆண்டுகளை தமிழகம் செழிக்க ஆள்வார்.வாழ்த்துவோம் தமிழக முதல்வரை!

English summary
Producer - Director Suresh Kamatchi has condemned rumour mongers on CM Jayalalithaa's health

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil