»   »  அணிவகுக்கும் விஷாலின் பொய்கள்! - போட்டுத் தாக்கும் சுரேஷ் காமாட்சி

அணிவகுக்கும் விஷாலின் பொய்கள்! - போட்டுத் தாக்கும் சுரேஷ் காமாட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என இரண்டு பெரிய அமைப்புகளிலும் பொறுப்பில் உள்ள விஷால், செய்யாததையெல்லாம் எல்லாம் செய்ததாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

ஊடகங்களுக்கு பொய் செய்திகளையும் தன் இமேஜை உயர்த்தும் வகையிலான செய்திகளையும் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்க செயலாளருமான விஷால்.

ஊடகங்களும், பொறுப்பில் இருப்பவர் சொல்கிறாரே என ஆராயாமல் பொதுமக்களிடையே அவரை ஒரு பிம்பமாக கொண்டு சேர்த்துவிடுகிறார்கள்.

ஆனால் உண்மை முகம் வேறாக இருக்கிறது. தப்புத்தப்பான தகவல்களை நம் மீடியா நண்பர்களாவது ஆராய்ந்து செய்திகளைத் தரலாம். செய்தியை முந்தித் தருவது முக்கியமல்ல. சரியான செய்தியைத் தருவதுதான் முக்கியம் என்பதை என் அன்பு மீடியா நண்பர்கள் இனியாவது கவனத்தில் வைக்க வேண்டும்.

தீராத க்யூப் பிரச்சினை

தீராத க்யூப் பிரச்சினை

தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் க்யூப் பிரச்சனை தீர்க்கப்படும் என்றார். தயாரிப்பாளர்களும் நம்பினோம். பத்திரிகையாளர்களும் நம்பினார்கள். விஷாலுக்கு பாராட்டுக்கள். அதன்பின்பு க்யூப் பிரச்சனை தீர்க்கப்பட்டதா என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பவில்லை. அவரும் அதன்பிறகு அதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை.

விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் போனதா?

விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் போனதா?

ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஒரு ரூபாய் விவசாயிக்குப் போகும் என செய்தி வீசினார். அவர் சொன்னதிலிருந்து இன்னிக்கு வரைக்கும் பல படங்கள் ரிலீசாயிடுச்சு. விவசாயிகளுக்கு பணம் போனதா? இல்லை. டிக்கெட் விற்கவே இல்லையான்னு தெரியலை. ஒருவேளை ஒவ்வொரு ரூபாயா சேர்த்துக்கிட்டு இருக்காரோ என்னவோ? பார்ப்போம்.

தமிழ் ராக்கர்ஸை பிடிச்சாச்சா?

தமிழ் ராக்கர்ஸை பிடிச்சாச்சா?

துப்பறிவாளன் பத்திரிகையாளர் சந்திப்பில் இன்னும் இரண்டு நாட்களில் தமிழ் ராக்கர்ஸ் முடக்கிருவோம். பிடிச்சிருவோம்னார். பிடிச்சதென்னவோ வீடியோ கடைக்காரனாம். அதுவும் யாருன்னு தெளிவா அவங்களுக்கே தெரியலையாம். இப்போ ஒரு அறிக்கையில் அவன் போர்னோகிராஃபி வெப்சைட் நடத்துறவன்.. சிடி போட்டு விக்கறவன்னு செய்தி வருது. போங்கப்பா நீங்களும் உங்க துப்பறிதலும்.

நாற்காலிக்காகத்தான் இத்தனை கதையா...

நாற்காலிக்காகத்தான் இத்தனை கதையா...

ஆனால் ஊடகங்களுக்கு செய்தித் தீனி. அனிதாவை மாதிரி ஏழை பெண்களுக்கு மருத்துவப் படிப்புக்கு செலவு பண்றேன்னு பேட்டி. அய்யோடா என்னதான்பா வேணும் உங்களுக்கு? இந்த நாற்காலியா? இதற்கு இப்படி சுற்றி வளைத்து பொய் செய்திகளாக அள்ளிவிட்டு நெருங்கணுமா?

இன்னும் எவ்வளவோ பொய்ச் செய்திகள் அணி வகுக்கும். அடையாளம் காணுங்கள் நண்பர்களே... இனியாவது ஆதாரம் கேளுங்கள். அட்லீஸ்ட் இதெல்லாம் சொன்னீர்களே செய்தீர்களான்னு கேள்வியாவது கேளுங்கள்.

என்றும் மரியாதையுடன்

சுரேஷ் காமாட்சி, இயக்குநர் & தயாரிப்பாளர்

English summary
Director Suresh Kamatchi has exposed Vishal in his latest statement
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil