மாநாடு பற்றிய மாஸ் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்...உற்சாகத்தில் சிம்பு
சென்னை : அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, வி ஹவுஸ் ப்ரொடெக்ஷன்ஸ் என்ற பேனரில் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மற்றொரு வில்லனாக மனோஜ் பாரதிராஜா நடித்துள்ளார். அரசியல் த்ரில்லர் படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாஸ் அப்டேட் தந்த தயாரிப்பாளர்
லாக்டவுன் சமயத்தில் சிம்பு நடித்த மன்மதன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாநாடு படம் பற்றிய மாஸ் அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்
அதில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பை வரும் புதன்கிழமை, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிடுவார் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை U1Records நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்போது சரியாக இருக்காது தான்
மற்றொரு பதிவில், மாநாடு படத்தின் ஆடியோ தொடர்பான விபரங்களை கொரோனா சூழலில் பல இழப்புக்கள் நடக்கும் நேரத்தில் அறிவிப்பது சரியாக இருக்காது என கருதுவதாகவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

கவுதம் மேனன் படத்தில் சிம்பு
சுரேஷ் காமாட்சியின் இந்த அறிவிப்பால் சிம்புவும். அவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளதாக சிம்பும் ட்விட்டரில் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

3 வது முறையாக கூட்டணி
ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களில் நடித்த சிம்பு, தற்போது 3 வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார். இது பற்றி சிம்பு ட்விட்டரில், சகோதரர் கவுதம் மேனனுடன் கூட்டணி வைப்பது எப்போதும் மகிழ்ச்சி. ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலுடன் புதிய பயணத்தை துவக்கி உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











