»   »  ஓசியில் ரூ 60 ஆயிரத்துக்குக் குடிக்கிறார் நடிகை... இதுக்கு என்ன தீர்வு விஷால்? - சுரேஷ் காமாட்சி

ஓசியில் ரூ 60 ஆயிரத்துக்குக் குடிக்கிறார் நடிகை... இதுக்கு என்ன தீர்வு விஷால்? - சுரேஷ் காமாட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிர்வாகத்தில் யார் தவறென்றாலும் முதல் எதிர்க்குரல் என்னிடமிருந்தே வந்திருக்கிறது. சரியென்றால் பாராட்டவும் செய்வேன்.

ஃபெப்சி என்ற அதிகாரத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களில் நானுமொருவன். கங்காரு படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றபோது பாதியில் படப்பிடிப்பை நிறுத்தி பெருவலியை அனுபவித்திருக்கிறேன். ஆனால் இன்று அறிவித்திருக்கும் சுதந்திரமான வேலை என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு சிறப்பானது. தைரியமானது. இதற்கு எனது பாராட்டுக்கள்.

Suresh Kamatchi's question to Vishal

ஆனால் இதை பாராட்டும் வேளையில் முக்கியமான இன்னொன்றை சொல்லாமல், செய்யச் சொல்லாமல், வலியுறுத்தாமல் கடந்துபோக முடியாது.

தயாரிப்பாளர்கள் ஒவ்வொருநாள் படப்பிடிப்பு முடிந்ததும் அதிகம் பயப்படுவது இந்த நடிகர்களின் உதவியாளர்களைப் பார்த்துதான்.

ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஐந்து முதல் அதிகபட்சம் ஏழு பேர் உதவிக்கு வருகிறார்கள். கடினமாக உழைக்கும் தொழிலாளர்களைவிட அதிக சம்பளம் வாங்குவது இவர்கள்தான்.

இவர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தை வைத்து அடுத்த நாள் படப்பிடிப்பையே நடத்திவிட முடியும். ஆனால் இவர்களுக்கு முதலில் செட்டில் செய்துவிடவேண்டும். இல்லையென்றால் இவர்கள் சார்ந்திருக்கும் நடிகரிடமோ நடிகையிடமோ சொல்லிவிட்டால் மறுநாள் அவர்கள் படப்பிடிப்பிற்கு வரமாட்டார்கள். அதற்கு பயந்தே முதலில் இவர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கும். பின்னர் இவர்களுக்கு குடிக்க, சாப்பிட, தங்க, துணிதுவைக்க என மற்ற செலவுகள் கொடுமை.

ஒரு சிகரெட் நடிகருக்காக வாங்கப்பட்டால் அதுவும் தயாரிப்பாளர் கணக்கில்தான். கேரவேன் செலவு, இவர்களுக்கான ஃப்ளைட், அல்லது ட்ரெயின் டிக்கெட்? தயாரிப்பு சாப்பாடு போட்டால் சாப்பிடமாட்டார்கள் நடிகர்கள், நடிகைகள். வேற எங்கேயாவது ஆர்டர் பண்ணுவார்கள். பில் கண்ணைக் கட்டும். இதே நடிகர் சங்கம் நடத்திய விழாவிற்கு வந்த ஒரு நடிகை தன்னுடன் நடித்த இரு நடிகர்களை அறைக்கு அழைத்து குடி குடி யென குடித்ததில் அறுபதாயிரத்துக்கும் மேல் பில். இதே நடிகர் சங்கச் செயலாளர் அதை திட்டித் தீர்த்தார். ஒருநாளுக்கே இப்படியென்றால் அறுபது நாள் படப்பிடிப்பு நடத்தும் தயாரிப்பாளன் எங்கே போவான்?

லட்சங்களிலும் கோடிகளிலும் சம்பளம் வாங்கிவிட்டு அதிலிருந்து ஒருபைசா கூட செலவில்லாமல் கையை வீசிக்கொண்டு வந்துவிட்டு கையை வீசிக்கொண்டு திரும்பப் போவார்கள்.

இதுதான் படப்பிடிப்பில் அதிக செலவை இழுத்து வைக்கிறது. இந்தப் பெருங்கொடுமைக்கு யார் தீர்வு காண்பது?

தொழிலாளர்கள் பிரச்சனைக்கு முடிவு கண்ட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கச் செயலாளராக இந்தப் பிரச்சனைகளைப் பேசி முடிவுக்கு கொண்டுவருவாரா?

கேரவேன், உதவியாளர்கள் சம்பளம், சிகரெட் செலவு, பயணச்செலவு, தயாரிப்பில் கொடுக்கும் உணவு இல்லாமல் வெளியில் ஆர்டர் பண்ணும் உணவுச் செலவு இவற்றிற்கு முழுப்பொறுப்பு நடிகர்களும் நடிகைகளும்தான் எனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வுகண்ட தயாரிப்பாளர் சங்கம் இந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு இதற்கு தீர்வு கண்டால் பாதி நிம்மதி கிடைக்கும். ஃபெப்சியை விட இவர்களை நினைத்துதான் பெரும் பயம் தயாரிப்பாளர்களுக்கு!

நடவடிக்கை எடுப்பாரா தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால்??
எதிர்பார்ப்புடன்

- சுரேஷ் காமாட்சி,

இயக்குநர் & தயாரிப்பாளர்

English summary
Producer & Director Suresh Kamatchi has raised a question to Vishal on reducing betas for hero, heroines assistants.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil