»   »  ஹிட்லர் – எங்கிருந்தோ வந்தான்... சுரேஷ் கிருஷ்ணாவின் டெலிபிலிம்

ஹிட்லர் – எங்கிருந்தோ வந்தான்... சுரேஷ் கிருஷ்ணாவின் டெலிபிலிம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சத்யா, அண்ணாமலை, பாட்ஷா என மெகா ஹிட் படங்கள் தந்த சுரேஷ் கிருஷ்ணா கடைசியில் இளைஞன் போன்ற படங்களை எடுத்து காணாமல் போனார்.

இப்போது சின்னத்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

முதல்முறையாக தொலைக்காட்சிக்காக ஹிட்லர்- எங்கிருந்தோ வந்தான் என்ற டெலிபிலிமை இயக்கியுள்ளார்.

Suresh Krishna's first Telefilm

ஜீ தமிழ் தயாரிக்கும் இப்புதிய படம் மே 29 பிற்பகல் 3.00 மனிக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாக உள்ளது.

வெறும் 9 நாளில் படமாக்கப்பட்ட இந்தப் படம் 140 நிமிடங்கள் ஒடக்கூடியது. இரண்டு பாடல்களும் படத்தில் உண்டு.

தேவயானி, டெல்லி கனேஷ், பரத் கல்யான், மற்றும் புதுமுகங்களான அர்ஜுன் (துயாய்) மற்றும் பவித்ரா இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தேவா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை பா விஜய் எழுதியுள்ளார்.

இந்தப் படம் குறித்து சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில், "பல புதிய எழுத்தாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு இது ஒரு புதிய வாய்ப்பு. சேனல்களுக்காக உருவாகும் இப்படங்கள் பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு தரும் புதிய களமாக அமையும்.

நச்சுனு சொல்லனும்னா கிரிக்கெட்டில் ஐபிஎல் மாதிரி, இந்த டெலிபிலிம். பல புதிய திறமைசாலிகளுக்கும், தடம் பதித்த திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு தரும் களம்," என்றார்.

English summary
Director Suresh Krishna is now making a Telefilm for Zee TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil