»   »  செகண்ட் பார்ட் எடுக்க தயாராகும் சுரேஷ் மேனன்!

செகண்ட் பார்ட் எடுக்க தயாராகும் சுரேஷ் மேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன். ஒளிப்பதிவாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்தவர்.

பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 'சோலோ', 'தானா சேர்ந்த கூட்டம்' படங்களின் மூலம் மீண்டும் நடிகராக திரையில் தோன்றியிருக்கிறார்.

இந்நிலையில், " 'புதிய முகம்' படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை நான் இயக்குவதற்காக எழுதி வைத்திருக்கிறேன்." எனக் கூறியுள்ளார் சுரேஷ் மேனன்.

சுரேஷ் மேனன்

சுரேஷ் மேனன்

ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன், 'புதிய முகம்', 'பாசமலர்கள்' உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார். 'விடுதலை', 'மருமகள்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விளம்பர படங்களை இயக்கி வந்த சுரேஷ் மேனன் இப்போது நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

புதிய முகம் பார்ட் 2

புதிய முகம் பார்ட் 2

'சோலோ', 'தானா சேர்ந்த கூட்டம்' படங்களில் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது, '4ஜி', 'ஜூங்கா', 'காளிதாஸ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'புதிய முகம்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்காக எழுதி வைத்திருக்கிறாராம்.

நடிக்க அழைத்தார்கள்

நடிக்க அழைத்தார்கள்

"சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு. நான் நடிக்காமல் இருந்த காலகட்டங்களில் பல படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள், ஆனால் என்னை எதுவும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. எனக்கு 'சோலோ', 'தானா சேர்ந்த கூட்டம்' படங்களில் நடிக்க நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. அதில் நடித்ததற்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

சிறப்பான காலகட்டம்

சிறப்பான காலகட்டம்

தற்போது வரும் இளம் இயக்குனர்கள் சிறப்பான, துணிச்சலான கதாபாத்திரங்களை எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் சினிமா துணிச்சலான கதைகள் வரும் ஒரு சிறப்பான கட்டத்தில் இயங்கி வருகிறது. எதிர்காலத்தில் இது போல சிறப்பான, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்.

சமூகப் பணிகள்

சமூகப் பணிகள்

சென்னை காவல்துறைக்காக போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் என்னுடைய பயனுள்ள நேரத்தைச் செலவழித்து வருகிறேன். கழிவறைகள் கட்டுவது போன்ற சமூக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறேன். சமூக வாழ்க்கையின் அனுபவங்கள் எனக்குள் இருக்கும் இயக்குனருக்கும், நடிகருக்கும் சிறப்பான விஷயங்களை கொடுத்து வருகிறது" எனக் கூறியிருக்கிறார் சுரேஷ் மேனன்.

English summary
Suresh Menon, former husband of Revathi recently acted in 'Solo', 'Thaana serndha koottam'. In this case, "I have written the story of the second part of the film 'Pudhiya mugam' ", Suresh Menon said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X