»   »  "து மிலி சப் மிலா"... ரெய்னா துரை பாட்டெல்லாம் பாடுதுப்பா!

"து மிலி சப் மிலா"... ரெய்னா துரை பாட்டெல்லாம் பாடுதுப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பாடகராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். முதல் முறையாக அவர் பாலிவுட் படம் ஒன்றில் பாட்டுப் பாடியுள்ளார்.

பேட்ஸ்மேனாக, பார்ட் டைம் பவுலராக, அபாரமாக பீல்டராக அறியப்பட்டவர் சுரேஷ் ரெய்னா. இடையில் தற்காலிக கேப்டனாகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சினிமா பக்கமும் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். மீருதியா கேங்ஸ்டர்ஸ் என்ற இந்திப் படத்தி்ல் இவர் பாடியுள்ளார். பாட்டும் ரிலீஸாகி விட்டது.

இந்திப் பாட்டுன்னா உசிரு

இந்திப் பாட்டுன்னா உசிரு

இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், உண்மைதான். எனக்குப் பழைய பாடல்கள் என்றால் உயிர். இந்தப் பாடலும் எனக்குப் பிடித்துப் போனதால் ஒத்துக் கொண்டேன்.

செம மெலடி

செம மெலடி

து மிலி சப் மிலா என்ற இந்தப் பாடல் குறித்து இயக்குநர் ஜீசான் குவாத்ரியும், இசையமைப்பாளரும் என்னிடம் கூறியதுமே ஒத்துக் கொண்டேன். காரணம் அத்தனை மெலடியானது இந்தப் பாடல்.

மெருகேற்றுவேன்

மெருகேற்றுவேன்

இது எனக்கு முதல் பாடல்தான். நன்றாக வந்துள்ளது என்று நம்புகிறேன். ரசிகர்கள் அளிக்கப் போகும் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்.

பிரியங்காதான் காரணம்

பிரியங்காதான் காரணம்

இந்தப் பாடல் வாய்ப்பு வந்தபோது எனது மனைவி பிரியங்காதான் என்னைப் பாடுமாறு வற்புறுத்தினார். நல்ல வாய்ப்பு இது, பயன்படுத்திக்கோங்க என்று ஊக்கம் கொடுத்தார்.

செம ரொமான்டிக்

பாடல் அருமையான ரொமான்டிக் பாட்டு. அனுபவித்து, ரசித்துப் பாடினேன். நல்ல அனுபவம் அது. மறக்க முடியாதது. எனது கிரிக்கெட்டை ஆதரித்தது போல எனது பாடலையும் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் ரெய்னா.

தோஸ்ட் படா தோஸ்த்

தோஸ்ட் படா தோஸ்த்

ஜீசன் குவாத்ரிதான் இந்தப் படத்தின் நாயகனும் கூட. இவரும் ரெய்னாவும் செம பிரண்ட்ஸாம். இந்த நட்பு காரணமாகவே பாடுவதற்கு ஒத்துக் கொண்டாராம் ரெய்னா.

கங்கனா படத்துடன் மோதல்

கங்கனா படத்துடன் மோதல்

மீருதியான் கேங்ஸ்டர்ஸ் படம் செப்டம்பர் 18ம் தேதி திரைக்கு வருகிறது. அதே நாளில்தான் கங்கனா ரனாவத் நடித்துள்ள கட்டி பட்டி படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Cricketer Suresh Raina is all set to make his Bollywood debut with actor-writer Zeishan Quadri's first directorial venture Meeruthiya Gangsters. Raina will go to Mumbai to record the song Tu Mili Sab Mila.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil