தரமான சம்பவம் செய்த இந்திய விமானப்படை: இரண்டே 2 வார்த்தை சொன்ன ரஜினி
சென்னை: பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையை பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள்ளேயே புகுந்து தீவிரவாத முகாம்கள் மீது இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்திய விமானப்படையின் இந்த வீரதீர செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

தாக்குதல்
இந்திய விமானப்படையை கமல் ஹாஸன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி ட்வீட் போட்டனர். இதை பார்த்த மக்கள் போர் வந்துவிட்டது தலைவரே இதையாவது பாராட்டி ஒரு ட்வீட் போடக் கூடாதா என்று விமர்சிக்கத் துவங்கினர். இந்நிலையில் ரஜினி ட்வீட் செய்துள்ளார்.
பிராவோ
இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து பிராவோ இந்தியா என்று ட்வீட் செய்துள்ளார் ரஜினிகாந்த்.
கிண்டல்
ரஜினி உணர்ச்சி பொங்க ட்வீட் போடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பிராவோ என்று மட்டும் கூறியது பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. இந்நிலையில் பிராவோ மேற்கிந்திய தீவுகளை சேர்ந்தவர் என்று கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.
அரசியல்
போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் அதுவரை அமைதி காப்போம் என்ற ரஜினியிடம் போர் வந்துவிட்டது என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











