»   »  ரோல்ல்லிங் சார்: தீபாவளிக்கு விஜய்யுடன் மோதும் சூர்யா #S36Diwali2018

ரோல்ல்லிங் சார்: தீபாவளிக்கு விஜய்யுடன் மோதும் சூர்யா #S36Diwali2018

Posted By:
Subscribe to Oneindia Tamil
தீபாவளிக்கு விஜய்யுடன் மோதும் சூர்யா- வீடியோ

சென்னை: சூர்யா 36 படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டது. தீபாவளிக்கு விஜய்யுடன் மோதுகிறார் சூர்யா.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூர்யா அடுத்த படத்தின் வேலையில் பிசியாகிவிட்டனர்.

அந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார்.

சூர்யா 36

சூர்யா 36 படத்தின் படப்பிடிப்பு திங்கட்கிழமை துவங்கியது. இதை படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு ரோல்ல்லிங் சார் என்று ட்வீட்டி அறிவித்துள்ளார். அருவி படம் மூலம் இந்த ரோல்ல்லிங் சார் வசனம் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

உறுதி

எஸ்.ஆர். பிரபுவின் ட்வீட்டை பார்த்த செல்வராகவன் பயணம் துவங்கிவிட்டது என்று அந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

விஜய்

விஜய்

சூர்யா 36 படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படமும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோதல்

மோதல்

சூர்யாவின் உயரம் பற்றி 2 தொகுப்பாளினிகள் கேலி செய்த விஷயத்திலேயே அவரின் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் ட்விட்டரில் மோதினர். தற்போது தீபாவளி ரிலீஸுக்கும் மோதிக் கொள்கிறார்கள்.

English summary
Suriya 36 movie has started rolling from monday. Suriya 36's producer SR Prabhu has given the update on twitter. This movie is set to hit the screens for Diwali. It is noted that Vijay 62 will also be released as Diwali special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil