சூர்யா 40 பற்றி அடுத்தடுத்த அப்டேட்...டைட்டிலில் சஸ்பென்ஸ் வைத்து அசத்தும் பாண்டிராஜ்

சென்னை : நடிகர் சூர்யா அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். படங்களுடன் சேர்த்து கவுதம் மேனன் இயக்கும் நவரசா என்ற வெப் சீரிசிலும் சூர்யா நடிக்கிறார். வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 ஆகிய படங்களிலும் சூர்யா நடித்து வருகிறார். இவற்றில் சூர்யா 40 படம் தான் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் பொருளாக மாறி உள்ளது.

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக, டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமாகி உள்ள பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் பாண்டிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது.

பிறந்தநாளில் மாஸ் போஸ்டர்

பிறந்தநாளில் மாஸ் போஸ்டர்

இதில் கையில் நீண்ட வாளுடன் சூர்யா, திரும்பி நடந்து செல்வது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டது. அத்துடன் படத்தில் நடிக்கும் பிரியங்கா, சூரி ஆகியோரின் கேரக்டர்களின் பெயர்கள் பற்றிய அப்டேட்டும் வெளியிடப்பட்டது.

ஆதினி என்ற கேரக்டரில் பிரியங்காவும், சூலாமணி என்ற கேரக்டரில் சூரியும் நடிக்கிறார்கள்.

Recommended Video

கோடி ரூபா கொடுத்தாலும் இந்த விஷயத்தை செய்யமாட்டாங்க Karthi & Sivakarthikeyan
அப்டேட் கேட்டுகிட்டே இருக்காங்க

அப்டேட் கேட்டுகிட்டே இருக்காங்க

இத்துடன் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன இசையமைப்பாளர் இமானுக்கு நன்றி தெரிவித்துள்ள பாண்டிராஜ், உங்கள் வாழ்த்துக்கு நன்றி. பாடல் ஏதாச்சும் பைனல் பண்ணி கொடுத்தீங்கன்னா சிங்கிள் ரிலீஸ் பண்ணலாம். அப்டேட், அப்டேட்ன்னு கேட்டுகிட்டே இருக்காங்க என குறிப்பிட்டிருந்தார்.

லாக்டவுன் முடியட்டும்

லாக்டவுன் முடியட்டும்

இந்நிலையில் சூர்யா 40 பற்றிய மற்றொரு மாஸ் அப்டேட்டையும் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்தில் ட்விட்டர் பதிவில், அன்பான ரசிகர்களே...சூர்யா 40 படத்தில் 35 சதவீதம் படம் முடிஞ்சுருக்கு. எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு. அடுத்த கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிஞ்சதும் ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்.

ஜுலையில் டைட்டில் அறிவிப்பா

ஜுலையில் டைட்டில் அறிவிப்பா

எங்க டீம் ரெடி. டைட்டில் மாஸ் ஆ, முன் அறிவிப்போட வரும். ஜுலை வரை டைம் கொடுங்க ப்ளீஸ் என குறிப்பிட்டுள்ளார். இதனால் படத்தின் டைட்டில் பற்றிய முக்கிய அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X