டிரெண்டிங்கில் கலக்கும் சூர்யா 41...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...என்ன காரணம் தெரியுமா?
சென்னை : சோஷியல் மீடியா டிரெண்டிங்கில் திடீரென இன்று #Suriya41 ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி உள்ளது. இதற்கான காரணம் தெரிந்ததும் உற்சாகத்தில் ரசிகர்கள், கொண்டாட துவங்கி விட்டனர்.
சூர்யா தற்போது டைரக்டர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா, கிருத்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

சூர்யா -பாலா கூட்டணி
பிதாமகன் படத்திற்கு பிறகு பாலா - சூர்யா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சூர்யா 41 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யா, மீனவர் ரோலில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் வழக்கமான பாலா படங்களை போல் இல்லாமல் வேற லெவலில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எப்போப்பா அப்டேட் வரும்
தமிழ் புத்தாண்டு அன்று சூர்யா 41 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டைட்டில் வெளியீடு என ஏதாவது ஒரு அப்டேட் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அப்படி வராததால், அடுத்து எந்த தேதியில் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர். இதற்கிடையில் சூர்யா 41 படத்தின் பாடல் காட்சிகள் என வீடியோ ஒன்று வெளியானதால் ரசிகர்கள் இது நிஜம் தானா என ஆவலாக கேட்க துவங்கி விட்டனர்.

டிரெண்டான சூர்யா 41
இந்நிலையில் இன்று திடீரென ட்விட்டரில் #Suriya41 என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. இதற்கு என்ன காரணம் என பார்த்தால், படம் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு தானாம். சூர்யா 41 படம் பற்றி பல வதந்திகள் பரப்பப்பட்டு வந்ததால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
Recommended Video

அடிதூள்...இது தான் காரணமா
அதில், கடந்த 34 நாட்களாக கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த சூர்யா 41 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் நிறைவடைந்தது. அடுத்த கட்ட ஷுட்டிங் கோவாவில் ஜுன் மாதம் துவங்கப்பட உள்ளது. இந்த ஷுட்டிங் தொடர்ந்து 15 நாட்கள் வரை நடைபெறும். இதற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தான் #Suriya41 ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











