முழுசா பாலா பட ஹீரோவாக மாறிய சூர்யா எப்படி இருக்கார் பாருங்க ...லீக்கான சூர்யா 41 ஸ்டில்
சென்னை : பாலா இயக்கி வரும் சூர்யா 41 படத்தின் பாடல் காட்சி ஸ்டில்கள் இன்டர்நெட்டில் லீக்காகி, செம டிரெண்டாகி வருகிறது. இதில் சூர்யாவின் கெட்அப்பை பார்த்து அனைவரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா தற்போது டைரக்டர் பாலா இயக்கி வரும் சூர்யா 41 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவுடன் கிருத்தி ஷெட்டி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பான சூர்யா 41
சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மீனவ கிராமங்களில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சூர்யா காது கேட்காத, மீனவர் ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. விரைவில் சூர்யா 41 படத்தின் வேலைகளை முடித்து விட்டு, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க தயாராக உள்ளார் சூர்யா.

ஒரு அப்டேட் கூட இல்லையே
சூர்யா 41 படம் துவங்கி இத்தனை நாட்களாகி விட்டதே தவிர படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள், என்ன கதை என்பது பற்றிய எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. ஆனால் சமீபத்தில் கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதியில் ஷுட்டிங் நடத்தப்பட்டதாகவும், இதில் வெளிநாட்டினர் பலர் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. வழக்கமான பாலா படமாக இல்லாமல் இது வித்தியாசமான கதை என்றும் சொல்லப்பட்டது.

போட்டோ லீக் ஆகிடுச்சா
இந்நிலையில் இன்று சூர்யா 41 படத்தின் பாடல் காட்சிகள் தொடர்பான ஸ்டில் இணையத்தில் லீக்காகி உள்ளது. அதில் கிருத்தி ஷெட்டி, சூர்யா இருவரும் பழைய சினிமாவில் வரும் ஹீரோ - ஹீரோயின் போல் காஸ்ட்யூம் அணிந்துள்ளனர். கிருத்தி ஷெட்டி, சூர்யாவை துரத்துவது போன்ற போட்டோ தான் லீக்காகி உள்ளது. இதில் அச்சு அசலாக பாலா பட ஹீரோவாகவே மாறி உள்ளார் சூர்யா.

சூர்யாவா இது...அடையாளமே தெரியல
இருந்தாலும் இந்த காட்சிகள் பிதாமகன் படத்தில் லைலா, சூர்யாவை துரத்திக் கொண்டு ஓடும் சீனை நினைவுபடுத்துவதாக பலரும் கூறி வருகிறோர்கள். அதே சமயம் சூர்யாவை துரத்துவது கிருத்தி ஷெட்டி கிடையாது என சிலர் கூறி வருகிறார்கள். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு என்ன ரோல்ப்பா
சமீபத்தில் மும்பை சென்ற சூர்யா, தாடி - முறுக்கு மீசையுடன் வந்திருந்த போட்டோக்கள் வெளியாகின. இது சூர்யா 41 கெட்அப்பா இல்லை வாடிவாசல் கெட்அப்பா என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் பழைய கால நடிகர் போன்று சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுவதால், சூர்யா 41 ல் என்ன ரோலில், என்ன கெட்அப்பில் சூர்யா நடித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











