Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சூர்யா 42 படத்துக்கு பூஜை போட்டாச்சு.. சிறுத்தை சிவா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகப் போகுதா?
சென்னை: வணங்கான் படத்தை முடித்து விட்டு இயக்குநர் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் படத்தை சூர்யா தொடங்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திடீரென சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகும் அறிவிப்பு வெளியாகி இன்பதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
சென்னையில் இன்று கோலாகலமாக சூர்யா 42 படத்திற்கு பூஜையும் போடப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெற்றிப் பாதையில் சூர்யா
சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார் நடிகர் சூர்யா. இயக்குநர் பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள சூர்யா 42 படத்தில் நடிக்க உள்ளார்.

2 பாகங்கள்
விஸ்வாசம், அண்ணாத்த படங்களை தொடர்ந்து சூர்யாவை வைத்து சிவா இயக்கப் போகும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகவும் கேஜிஎஃப் பாணியில் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பான் இந்தியா படமாக உருவாக உள்ள இந்த படத்திற்கு பாலிவுட் ஹீரோயினை புக் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திஷா பதானி
பூஜா ஹெக்டே, கியாரா அத்வானி என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், பாலிவுட்டின் படு கவர்ச்சியான நடிகை திஷா பதானியை இந்த படத்தில் நடிக்க வைக்க சிறுத்தை சிவா முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். படத்தின் பூஜைக்கு திஷா பதானி வருகை தந்தால், அவரது புகைப்படங்களும் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்து விடும்.

தேவி ஸ்ரீபிரசாத்
சிங்கம் உள்ளிட்ட சூர்யாவின் படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் தான் சூர்யா 42 படத்துக்கும் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்துக்கு இவர் போட்ட இசையெல்லாம் இந்தியளவில் மிகப்பெரியளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. வசனங்கள் மதன் கார்கி, ஒளிப்பதிவு சிவா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வரும் வெற்றி பழனிச்சாமி தானாம்.

பூஜை போட்டாச்சு
தேவி ஸ்ரீபிரசாத், மகத் உள்ளிட்ட நடிகர்கள் சென்னை ராமாவரத்தில் நடைபெற்று வரும் சூர்யா 42 படத்திற்கான பூஜையில் கலந்து கொள்ள வருகைத் தரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. வெகு விரைவாகவே அதிகாரப்பூர்வமாக பூஜை போட்டோக்களை வெளியிடுவார்கள் என தெரிகிறது.
Recommended Video

வாடிவாசல் லேட் ஆகும்
சூரி, விஜய்சேதுபதி நடித்து வரும் விடுதலை படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இன்னமும் முடிக்காத நிலையில், நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து நடித்து முடித்து வருகிறார். வாடிவாசல் படத்துக்காக காளைகளை அடக்கும் பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். சூர்யா 42 படமும் முடிந்த பிறகு தான் வாடிவாசல் படத்துக்கு சூர்யா செல்வார் என்பது தெரிகிறது.