பாகுபலி பாதி கேஜிஎஃப் மீதி… 10 மொழிகளில் சூர்யா 42… படு மிரட்டலாக வெளியான மோஷன் போஸ்டர்
சென்னை: சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் அவரது 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.
ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் படு மிரட்டலாக வெளியாகியுள்ளது.

சூர்யா 42 படப்பிடிப்பு தொடங்கியது
சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், விக்ரம் படத்தில் ஒரு ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் வந்து மிரட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது படத்தின் படப்பிடிப்பும் தற்போது தொடங்கியுள்ளது.

படுமிரட்டலாக வெளியான மோஷன் போஸ்டர்
'சிறுத்தை' சிவா இயக்கும் சூர்யா 42 படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்தப் படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், சூர்யா 42 மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் சூர்யா 42
பாகுபலி, கேஜிஎஃப் படங்கள் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகி மாஸ் காட்டின. இந்த இரண்டு படங்களின் பிரம்மாண்டத்தையும் மேக்கிங்கையும் சேர்த்தால் எப்படி இருக்குமோ? அப்படி உருவாகியுள்ளது சூர்யா 42 மோஷன் போஸ்டர். அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என வரிசையாக திரையில் வித்தியாசமான பெயர்கள் வர, கருடன் ஒன்று பறந்து வருகிறது. இறுதியாக டெரரான விண்டேஜ் லுக்கில் சூர்யா அவதாரமெடுத்து திரையில் வருவது சிலிர்க்க வைக்கிறது.

10 மொழிகளில் வெளியாகும் சூர்யா 42
ப்ரோமோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என வருவதைப் பார்த்தால், இந்தப் படம் 5 சாம்ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் கதையாக வரலாற்றுப் பின்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வலிமை மிக்க வீரனாக சூர்யா மிரட்டுவார் என்பதற்கான லீடும் இந்த போஸ்டரில் இருக்கிறது. சூர்யாவின் கேரியரிலேயே மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால், சூர்யா 42 படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











