சூர்யா 42 எத்தனை மொழிகளில் ரிலீஸ் தெரியுமா?... அப்டேட்லயே அலற விடுறாங்க

சென்னை : சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள சூர்யா 42 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் படத்தின் டைரக்டர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், ஹீரோ சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாலா இயக்கும் வணங்கான் படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங்கை துவக்கவும், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்கும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் அந்த கேப்பில் சிறுத்தை சிவா உடனான படத்தை முடிக்க சூர்யா முடிவு செய்துள்ளார்.

இந்த படம் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு, பல காரணங்களால் தொடர்ந்து தள்ளி போய் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.இந்த படத்தை ஞானவேல்ராஜ் தயாரிக்கிறார்.

சூர்யா 42 ஷுட்டிங் துவங்கியாச்சு

சூர்யா 42 ஷுட்டிங் துவங்கியாச்சு

நேற்று பூஜை முடிவடைந்த நிலையில், இன்று முதல் சூர்யா 42 பட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்ட ஷுட்டிங் சென்னையில் 10 நாட்கள் நடத்தப்பட உள்ளதாகவும், அதன் பிறகு செப்டம்பர் மாத மத்தியில் கோவா செல்லவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யா 42 ஹீரோயின் இவர் தானா?

சூர்யா 42 ஹீரோயின் இவர் தானா?

கோவாவில் திட்டமிடப்பட்டுள்ள ஷுட்டிங் தொடர்ந்து 25 நாட்கள் வரை நடைபெறும் என சொல்லப்படுகிறது. மெகா பட்ஜெட் படமாக தயாராக உள்ள சூர்யா 42 படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.முதலில் இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் தற்போது திஷா பதானியின் பெயர் அடிபடுகிறது.

மோஷன் போஸ்டரும் வர போகுதா

மோஷன் போஸ்டரும் வர போகுதா

இதில் ரசிகர்களை கொண்டாட வைக்கும் புதிய அப்டேட் என்னவென்றால் சூர்யா 42 படத்தில் மோஷன் போஸ்டர் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

ரிலீசுக்கு இப்படி ஒரு பிளானா

ரிலீசுக்கு இப்படி ஒரு பிளானா

சூர்யா 42 படத்தை பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதுவும் ஒன்று, இரண்டு அல்ல. மொத்தமாக 10 மொழிகளில் சூர்யா 42 படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அவர் கூட இதை பண்ணலியே

அவர் கூட இதை பண்ணலியே

மணிரத்னம் எடுத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை கூட 5 மொழிகளில் தான் ரிலீஸ் செய்கிறார்கள். ஆனால் சூர்யா படத்தை 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய போகிறார்களா? அப்படி என்ன கதையாக இருக்கும்? இப்போதே அடுத்த அப்டேட் எப்போ வரும் ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X