Don't Miss!
- News
அந்த 7 மணி நேரம்.. மேஜையில் பைல்களை எடுத்து வைத்த எடப்பாடி.. யார் அந்த ஒருவர்? பறந்து வந்த உத்தரவு
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
லீக்கான சூர்யா 42 டைட்டில்... அஜித் ரூட்டில் சூர்யாவின் V சென்டிமெண்ட்... இது ஒர்க் அவுட் ஆகுமா?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க 3டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.
சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் தவிர இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், தற்போது டைட்டில் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
சில
கேரக்டர்கள்
நம்மை
டேமேஜ்
செய்யும்..
ஆனால்
அது
தேவைப்படுது..
ரோலக்ஸ்
குறித்து
பேசிய
சூர்யா!

இறுதிக்கட்டத்தில் சூர்யா 42?
சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. முன்னதாக பாலா இயக்கத்தில் அவர் நடித்து வந்த வணங்கான் திரைப்படம் பாதியிலேயே டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சூர்யா 42 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிரமிக்க வைத்த மோஷன் போஸ்டர்
'சிறுத்தை' சிவா இயக்கும் சூர்யா 42 படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சூர்யா ஜோடியாக திஷா பதானியும் காமெடி கேரக்டரில் யோகி பாபுவும் நடித்து வருகின்றனர். மற்ற நடிகர்கள் பற்றிய அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். சூர்யா 42 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போதே மிரட்டலான மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

சூர்யா 42 டைட்டில் இதுதானா?
பாகுபலி, கேஜிஎஃப் படங்களின் பிரம்மாண்டமும் மேக்கிங்கும் சூர்யா 42 படத்தில் இருக்கும் என எதிர்பார்க்க வைத்துள்ளது இந்த மோஷன் போஸ்டர். அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என வரிசையாக திரையில் வித்தியாசமான பெயர்கள் வர, கருடனாக பறந்து வருகிறார் சூர்யா. இந்த மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், தற்போது சூர்யா 42 பட டைட்டில் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி 'வீர்' என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் ரூட்டில் V சென்டிமெண்ட்
அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு படங்களை இயக்கியுள்ளார் சிவா. இந்தப் படங்களின் டைட்டில் அனைத்துமே வி சென்டிமெண்டில் தான் வைக்கப்பட்டன. அதே ஃபார்முலாவில் தான் சூர்யா 42 படத்துக்கும் டைட்டிலை தேர்வு செய்துள்ளாராம் சிவா. அஜித்தின் சக்சஸ் ஃபார்மட் சூர்யாவுக்கும் செட்டாகும் என கணக்குப் போடுகிறார் சிவா. ஆனால் இதனை படம் வெளியாகும் போது பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதனிடையே சூர்யா 42 படத்தின் டைட்டில் 'வீர்' என்ற செய்தி வைரலாகி வரும் நிலையில், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. சூர்யா 42 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.