»   »  சிங்கம் 3... அடுத்த வாரம் விசாகப்பட்டிணத்தில் ‘கர்ஜனை’ தொடங்குகிறது

சிங்கம் 3... அடுத்த வாரம் விசாகப்பட்டிணத்தில் ‘கர்ஜனை’ தொடங்குகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு அடுத்தவாரம் விசாகப் பட்டிணத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம்,' 'சிங்கம்-2' ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. 'சிங்கம்' படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்து இருந்தார். 'சிங்கம்-2' படத்தில் சூர்யா ஜோடிகளாக அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.


இந்த இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தை எடுக்க ஹரி திட்டமிட்டார்.


2 நாயகிகள்...

2 நாயகிகள்...

இதிலும் நாயகனாக சூர்யாவே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, சுருதிஹாசன் என இரண்டு நாயகிகள். இதில், சுருதிஹாசன் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.


மனைவி அனுஷ்கா

மனைவி அனுஷ்கா

இப்படத்தில் சூர்யாவுக்கு மனைவி வேடத்தில் அனுஷ்கா வருவார் என்று தெரிகிறது. முதல் இரு பாகங்களிலும் அனுஷ்கா இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


வெள்ளத்தால் தாமதம்...

வெள்ளத்தால் தாமதம்...

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் இறுதியில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், சென்னையைப் புரட்டிப் போட்ட மழையால் படப்பிடிப்பு தள்ளிப் போனது.


விசாகப்பட்டிணத்தில்...

விசாகப்பட்டிணத்தில்...

தற்போது வடகிழக்குப் பருவமழை முடிவடைந்த நிலையில், அடுத்த வாரம் விசாகப் பட்டிணத்தில் சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


இசை...

இசை...

'சிங்கம்,' 'சிங்கம்-2' ஆகிய இரண்டு படங்களுக்கும் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்தார். 'சிங்கம்-3' படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Suriya's third instalment in the Singam franchise will finally go on the floors next week in Vishakhapatnam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil