குழந்தைகளை போட்டோ எடுக்காதீங்க ப்ளீஸ்.. மும்பையில் சூர்யா, ஜோதிகா வைத்த கோரிக்கை!
மும்பை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது குழந்தைகளுடன் மும்பைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், பெரிய ஹோட்டல் ஒன்றில் இருந்து சூர்யா மற்றும் ஜோதிகா வெளியேறுவதை அறிந்த புகைப்படக்கலைஞர்கள் அவர்களை போட்டோ எடுக்க அணுகினர்.
குழந்தைகளை மட்டும் போட்டோ எடுக்காதீங்க என சூர்யா மற்றும் ஜோதிகா கேட்டுக் கொண்டது பாலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மும்பையில் சூர்யா ஜோதிகா
2டி நிறுவனம் தயாரிப்பில் நாளை விருமன் படம் வெளியாக உள்ள நிலையில், இந்தியில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தின் பணிகளை கவனிக்க நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மும்பைக்கு பறந்து சென்றுள்ளனர். அஃபிஷியல் ட்ரிப்பாக இல்லாமல், குடும்பத்துடனே சூர்யா மற்றும் ஜோதிகா சென்றுள்ள நிலையில், சுற்றுலா தளங்களுக்கு செல்ல உள்ளனரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

குழந்தைகளுடன்
நடிகர் சூர்யாவின் மகள் திவ்யா சமீபத்தில் தான் 10வது முடித்தார். இந்நிலையில், திவ்யா மற்றும் மகன் தேவையும் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஏதாவது குடும்ப விழாவில் பங்கேற்க உள்ளனரா? என்கிற கேள்விகளும் உலா வருகின்றன. இந்நிலையில், மும்பையில் உள்ள பாஸ்டியன் வொர்லி ஹோட்டலில் இருந்து அவர்கள் வெளியேறும் போது அவர்களை சுற்றி வளைத்த புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுக்க அணுகி உள்ளனர்.

குழந்தைகளை மறைத்த ஜோதிகா
ஆனால், சட்டென தனது குழந்தைகளை நடிகை ஜோதிகா கேமரா கண்களில் இருந்து தனது பின்னால் இழுத்து மறைத்துக் கொண்டார். அதை கவனித்த நடிகர் சூர்யா புகைப்படக் கலைஞர்களிடம் கோரிக்கை வைக்க அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் வேண்டாம்
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, குழந்தைகளை போட்டோ எடுக்க வேண்டாம், நாங்கள் போஸ் தருகிறோம் என புகைப்படக் கலைஞர்களிடம் சொல்ல, அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து குழந்தைகளை தவிர்த்து சூர்யா மற்றும் ஜோதிகாவை போட்டோ எடுத்துள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்பொது டிரெண்டாகி வருகின்றன.

பாலிவுட் ரசிகர்கள் ஆச்சர்யம்
பாலிவுட் பிரபலங்களின் குழந்தைகளை சினிமா விழாக்களுக்கு அழைத்து வந்து அவர்களையும் ஸ்டார்களாக மாற்றி வரும் பாலிவுட் பிரபலங்களுக்கு மத்தியில் கோலிவுட் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் இந்த செயல் பாலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











