டில்லி vs ரோலக்ஸ் சண்டையெல்லாம் வீட்டிலேயே நிறைய போட்டுட்டோம்.. சூர்யா, கார்த்தியின் செம பேச்சு!

சென்னை: இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள விருமன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.

மூத்த இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டே நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவருமே ஒரே சமயத்தில் மேடை ஏறி பேசியது தான்.

சூர்யா செல்ஃபி

சூர்யா செல்ஃபி

நெய்வேலியில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். சமீபத்தில் திருச்சியில் ரசிகர்களுடன் நடிகர் அஜித் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட நிலையில், மதுரையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

டிரைலரை வெளியிட்ட ஷங்கர்

டிரைலரை வெளியிட்ட ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் தனது மகள் அதிதி ஷங்கரை விருமன் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்த உள்ள நிலையில், நேற்று நடைபெற்ற டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். மேடை ஏறி பேசிய ஷங்கர் தனது மகளின் முதல் படமான விருமன் படத்தின் அதிரடியான டிரைலரையும் கவுன்ட்டவுன் சொல்லி வெளியிட்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ஆனந்தத்தில் அதிதி

ஆனந்தத்தில் அதிதி

தனது முதல் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அதிதி ஷங்கர் படு உற்சாகமாக காணப்பட்டார். மேடையேறி யுவன் சங்கர் ராஜா உடன் பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினார் அதிதி ஷங்கர். அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் ஜோடி சேர்ந்த நிலையில், நேற்று இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

ரோலக்ஸ் vs டில்லி

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஒன்றாக மேடையேறி பேசும் போது, டில்லியை ரோலக்ஸ் என்ன பண்ணலாம் என சூர்யா ரசிகர்களை பார்த்து கேட்க, ரசிகர்கள் ரியாக்‌ஷன் கொடுப்பதற்கு முன்னதாகவே முந்திக் கொண்ட நடிகர் கார்த்தி டில்லி ரோலக்ஸ் சண்டையெல்லாம் வீட்டிலேயே நிறைய போட்டுட்டோம் என்று எஸ்கேப் ஆகும்படி பேசினார். ஆனால், ரசிகர்கள் அதை நாங்க திரையில் பார்க்க ஆசைப்படுகிறோம் என கூச்சலிட, கண்டிப்பா காலம் அதற்கு பதில் சொல்லும் என சூர்யா டில்லி vs ரோலக்ஸ் கிளாஷ் சீக்கிரமே வரும் என்பதற்கான ஹின்ட் கொடுத்து விட்டுச் சென்றார்.

விடிய விடிய டிரெண்டிங்

விடிய விடிய டிரெண்டிங்

நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டு இரவு நேரம் வரை நடந்து முடிந்த விருமன் இசை வெளியீட்டு விழா ஹாஷ்டேக் விடிய விடிய ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் சூர்யா மற்றும் கார்த்தி பேசிய வீடியோக்களை யூடியூப் லைவ்வில் இருந்து கிராப் செய்தும் நேரடியாக மதுரையில் மொபைலில் எடுத்ததை ஷேர் செய்தும் டிரெண்ட் செய்து வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 12ம் தேதி விருமனின் வேட்டை விஸ்வரூபம் எடுக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X