For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடிதூள்...பாண்டிராஜ் – சூர்யா காம்போவில் இன்னொரு படம் லோடிங்கா?

  |

  சென்னை : சூர்யா - டைரக்டர் பாண்டிராஜ் கூட்டணியில் மற்றொரு படம் வர போகும் தகவலை டைரக்டர் பாண்டிராஜே லீக் செய்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். எப்போது அந்த படம் துவங்கும் என கேட்டு வருகிறார்கள்.

  சர்ச்சையை கிளப்பிய 'கங்குபாய் கத்தியவாடி'…4 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?சர்ச்சையை கிளப்பிய 'கங்குபாய் கத்தியவாடி'…4 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

  டைரக்டர் பாண்டிராஜ் டைரக்ஷனில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் மார்ச் 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகி செம ஹிட்டாகி உள்ளது. குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பில் இருந்தும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது. படம் ரிலீசான முதல் நாளே படக்குழுவினர் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடி உள்ளனர்.

   இதென்ன புது தகவலா இருக்கு

  இதென்ன புது தகவலா இருக்கு

  இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படக்குழுவினர் இன்று ட்விட்டர் ஸ்பேசில் பங்கேற்றனர். சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்த இந்த கலந்துரையாடலில் படம் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்தனர். அப்போது டைரக்ரை் பாண்டிராஜிடம் இந்த கதைக்கு எப்படி சூர்யாவை தேர்வு செய்தீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாண்டிராஜ், நான் சூர்யாவிற்கு சொல்லி ஓகே பண்ணிய கதையே வேறு. அதற்குள் இப்படி ஒரு கதை, கிராமத்து கெட்அப்பில் சூர்யாவை பார்க்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் விரும்பியதால் இந்த படத்தை கையில் எடுத்தோம் என்றார்.

   ஒரே சமயத்தில் 2 படங்கள்

  ஒரே சமயத்தில் 2 படங்கள்

  அதோடு சூர்யாவிடமும், சூர்யா- பாண்டிராஜ் இணையும் படம் மீண்டும் எப்போது வரும் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, அடுத்ததாக டைரக்டர் பாலா, வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்கிறேன். இரண்டும் ஒரே சமயத்தில் துவங்கப்பட உள்ளது. பாண்டிராஜ் சொல்லிய கதையை எடுக்க வேண்டுமானால் இன்னும் 3 வருடங்கள் தேவைப்படும். பாண்டிராஜ் ஏற்கனவே சொல்லியதை போல் நாங்கள் எடுக்க நினைத்த படம் வேறு. அதற்குள் எனக்கு கோவிட் வந்து, ஆக்சிஜன் பைப்புடன் போய் படுத்து விட்டேன்.

  என்னது 3 வருஷம் வேணுமா

  என்னது 3 வருஷம் வேணுமா

  குணமாகி வந்த இந்த கதை கிடைத்தது. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் இது மிகவும் முக்கியமான மெசேஜ் சொல்லுவதாக தோன்றியது. அதனால் இந்த கதையை எடுக்க துவக்கினோம். அடுத்ததாக கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த படத்தையும் எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். 10 நாட்கள் ஷுட்டிங் நடத்துவோம். பிறகு மற்ற படங்களில் நடிங்க சார். பிறகு நேரம் கிடைக்கும் போது அப்புறம் கொஞ்சம் எடுப்போம் என்று கூட சொல்லி இருக்கிறார்.

   ரொம்ப கவனமா இருக்கோம்

  ரொம்ப கவனமா இருக்கோம்

  நீண்ட நாட்களுக்கு பிறகு வேட்டி கட்டி நடித்த அனுபவம் எனக்கும் பிடித்திருந்தது. தமிழன் வேட்டி கட்டுவதில் என்ன ஆச்சரியம் என்ற டயலாக்கை கூட படத்தில் வைத்துள்ளோம். சீக்கிரமே மற்றொரு படத்தில் இணைவோம். ரசிகர்களுக்காக பொழுதுபோக்கு கமர்ஷியல், அதோடு மெசேஜ் சொல்லும் படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருக்கிறோம் என்றார் சூர்யா.

  மாநாடு டயலாக் பேசிய சூர்யா

  மாநாடு டயலாக் பேசிய சூர்யா

  மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா பேசும் தலைவரே...தலைவரே டயலாக்கை குறிப்பிட்ட சூர்யா, அன்பான போன்ஸ்...அன்பான ஃபேன்ஸ்...ஐ லவ் யூ ஆல் என்றார் சூர்யா. சூர்யா ரொம்ப ஜாலியாக ஓப்பனாக பேசிய இந்த பேச்சு அனைவரையும் கவர்ந்தது. பேச்சிற்கு இடையே புகழ் இந்த படத்திற்காக எடுத்துக் கொண்ட முயற்சியை குறிப்பிட்டு பாராட்டினார் சூர்யா. இதை எதிர்பாராமல் திக்குமுக்காடி போன புகழ், இதை விட எனக்கு என்ன சந்தோஷம் இருக்க முடியும் என்றார்.

  English summary
  In twitter space, Etharkkum Thunindhavan team shared their movie experience with fans. In this talk suriya and director pandiraj confirmed that their combo will reunite once again. Director Bala and Vetrimaran movies will begin simultinously. Then we will reunite.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X