வாவ்...ரோலக்ஸ் ஸ்வாக்...அசத்தலாக வெளியான சூர்யா பிறந்தநாள் சிடிபி

சென்னை : நடிகர் சிவக்குமாரின் முத்த மகனான சூர்யா, நேருக்கு நேர் படத்தின் முலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பல படங்களில் நடித்தாலும் டைரக்டர் பாலா இயக்கிய நந்தா படம் தான் சூர்யாவிற்கு முதல் கமர்ஷியல் வெற்றியை கொடுத்தது.

நந்தாவை தொடர்ந்து காக்க காக்க, பிதாமகன் போன்ற படங்கள் சூர்யாவின் இமேஜை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தின. பல கமர்ஷியல் வெற்றி படங்களைக் கொடுத்த சூர்யா, கொரோனா சமயத்தில் ஒட்டுமொத்த உலகமே முடங்கி இருந்த சமயத்தில் சூரரைப் போற்று படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்து அதிலும் வெற்றி பெற்றார்.

சூரரைப் போற்று படம் 30 க்கும் மேற்கொண்ட சர்வதேச விருதுகளை வென்று, ஆஸ்கார் வரை சென்றது. அதைத் தொடர்ந்து ஜெய்பீம் படமும் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டு, சர்வதேச கவனத்தை ஈர்த்தது. சூர்யா படத்திற்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை என ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் தற்போது ஆஸ்கார் அகாடமியே உறுப்பினராக சேர வர சூர்யாவிற்கு சமீபத்தில் அழைப்பு விடுத்துள்ளது.

கெஸ்ட் ரோலுக்கு வரவேற்பு

கெஸ்ட் ரோலுக்கு வரவேற்பு

சூர்யா ஹீரோவாக நடித்தை விட சமீபத்தில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்த கேரக்டர் தான் சூர்யாவிற்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது. படம் வந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் ரசிகர்கள் தற்போது வரை சூர்யாவை ரோலக்ஸ் சார் என்று தான் குறி வருகின்றனர்.

கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்

கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்

இந்நிலையில் ஜுலை 23 ம் தேதி சூர்யா தனது 47வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். சூர்யாவின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். ரத்த தானம், அன்ன தானம் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சூர்யா 41 டைட்டில் வெளியீடு

சூர்யா 41 டைட்டில் வெளியீடு

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 41 படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் டைரக்டர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் படத்திற்கு வணங்கான் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் ட்ரீட் என்ன

பிறந்தநாள் ட்ரீட் என்ன

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி வெளியிடப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. டீ கிளாஸ், பக்கத்தில் காப்பு இருப்பது போன்ற போஸ்டர் இதற்காக வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா பிறந்தநாளன்று வாடிவாசல், சூர்யா 42 படங்களின் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிடிபி வெளியிடப்பட உள்ளதால், இந்த பிறந்தநாள் சூர்யாவிற்கு மிகச் சிறந்த பிறந்தநாளாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

காமன் டிபி வெளியீடு

காமன் டிபி வெளியீடு

இந்த சமயத்தில் இன்று சூர்யா பிறந்தநாள் காமன் டிபி இன்று வெளியிடப்பட்டது. ரோலக்ஸ் கெட்அப்பில் கையில் அரிவாளுக்கு பதில் பத்திரிக்கையுடன் கால் மேல் கால் போட்டு சிரிந்தபடி சோஃபோவில் அமர்ந்திருக்க, அவருக்கு பின்னால் ஆஸ்கார் அழைப்பு விடுத்த போஸ்டர், அதற்கு பின்னால் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தை ஒருவர் டிவியில் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

டிரெண்டில் தெறிக்க விடுறாங்க

டிரெண்டில் தெறிக்க விடுறாங்க

சூர்யாவின் இந்த பிறந்த நாள் காமன் டிபியை ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் இந்த சிடிபி வைரலாகி வருகிறது. சிடிபி வெளியிடப்பட்டதை முன்னிட்டு #Vanangaan, #Suriya42, #VaadiVaasal, #SuriyaBirthdayBashCDP, #Rolex போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X