»   »  சி3 விளம்பர நிகழ்ச்சி ரத்து: பார்த்துக்கப்பா பீட்டா இது தான் எங்க சிங்கம்!

சி3 விளம்பர நிகழ்ச்சி ரத்து: பார்த்துக்கப்பா பீட்டா இது தான் எங்க சிங்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக போராடி வருபவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சூர்யா தனது சி3 படத்தின் மதுரை மற்றும் நெல்லை விளம்பர நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் மாபெரும் புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார்.

Suriya cancels C3 promos for Jallikattu

இதை பார்த்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்போ அவர் தனது எஸ் 3 (எ) சி3 படத்திற்கு விளம்பரம் தேட அறிக்கை விட்டதாக கொழுப்புப் பேச்சு பேசியது. பீட்டாவின் வம்பு பேச்சை கேட்ட சூர்யா ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.

இந்நிலையில் சூர்யா ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் மதுரை மற்றும் நெல்லையில் நடைபெறவிருந்த சி3 பட விளம்பர நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

பார்த்துக்கப்பா பீட்டா இது தான் எங்க சிங்கம்டா என சூர்யா ரசிகர்கள் மார்தட்டி பெருமையாக பேசுகிறார்கள்.

English summary
Suriya has cancelled C3 promotional programmes to be held in Madurai and Tirunelveli to show respect to those who protest for Jallikattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil