»   »  ரசிகர்களோடு 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூர்யா!

ரசிகர்களோடு 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. பொங்கல் ரிலீசாக வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆன நிலையில் 'சொடக்கு...' பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் படத்தின் ப்ரொமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் நடனம் போட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

Suriya dances with his fans in kerala

கேரளாவில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. அதனால், அவரது படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் ப்ரொமோஷன் பணிகளைச் செய்வது வழக்கம். அதன்படியே, இந்த முறையும் கொச்சினில் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

எந்தவொரு முன்னணி நடிகரும் செய்யாத செயலை ரசிகர்களுக்காக சூர்யா செய்வது பாராட்டுக்குரிய விஷயம். ரசிகர்கள் மத்தியில் சூர்யா டான்ஸ் ஆடிய வீடியோவை அவரது ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

English summary
Suriya, who went for the 'Thaana serndha koottam' film's promotion in Kerala, entertained his fans with 'Sodakku' dance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X