புதுசா சொகுசு கார் வாங்கிய சுதா கொங்கரா.. ஃபர்ஸ்ட் யாரு ஓட்டுறா பாருங்க.. டிரெண்டாகும் பிக்ஸ்!

சென்னை: இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என இரு தரமான சம்பவங்களை செய்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா புதிதாக ஆடி கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

புதிதாக சொகுசு கார் வாங்கிய சுதா கொங்கரா இயக்குநர் மணிரத்னம், நடிகர் சூர்யா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உடன் முதல் ரைடு போன புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

அதன் புகைப்படங்களை சூர்யா ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் காட்டுத் தீ போல ஷேர் செய்து வருகின்றனர்.

சுதா கொங்கரா

சுதா கொங்கரா

மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கி தமிழ் சினிமாவிலும் இப்படியொரு படத்தை கொடுக்க முடியும் என இந்திய ரசிகர்களுக்கு நிரூபித்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று படத்தை முடித்து விட்டு அவர் சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று என அடுத்த சம்பவத்தை செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அடுத்ததாக கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹம்பாலே நிறுவனத்தில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

ஆடி கார்

ஆடி கார்

லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் வாங்கித் தந்தது போல சொகுசு கார் ஒன்றை பரிசாக சுதா கொங்கராவுக்கு எந்த தயாரிப்பாளரும் இதுவரை அளிக்காத நிலையில், தனது உழைப்பால் புதிய ஆடி கார் ஒன்றை இயக்குநர் சுதா கொங்கரா வாங்கி உள்ளார். அதன் புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

கார் ஓட்டிய சூர்யா

கார் ஓட்டிய சூர்யா

சுதா கொங்கராவின் காரை முதல் ஆளாக நடிகர் சூர்யா ஓட்டியுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சூர்யா 42 படத்தில் பிசியாக நடித்து வந்தாலும், தனது ஃபேவரைட் இயக்குநர் அழைத்த உடனே இந்த புதிய கார் வாங்கும் வைபவத்தில் கலந்து கொண்டார் நடிகர் சூர்யா.

மணிரத்னம் முதல் ஜிவி பிரகாஷ் வரை

மணிரத்னம் முதல் ஜிவி பிரகாஷ் வரை

தனது குருநாதரான இயக்குநர் மணிரத்னம் மற்றும் சூரரைப் போற்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உடன் கேங்காக புதிய கார் வாங்கி ஓட்டிப் பார்த்து ட்ரீட் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.

ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

சுதா கொங்கரா மீண்டும் சூர்யாவுடன் இணைந்து அடுத்த படத்தை இயக்குவேன் என அறிவித்துள்ளார். இந்த முறை தியேட்டரில் அந்த சம்பவம் நடக்க வேண்டும் என ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர். சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் தியேட்டர் எக்ஸ்ப்ரீயன்ஸுக்காக காத்திருக்கின்றனர்.

ரத்தன் டாட்டா பயோபிக்

ரத்தன் டாட்டா பயோபிக்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அடுத்து நடிக்க உள்ள படம் ரத்தன் டாட்டாவின் பயோபிக் என தகவல்கள் வெளியாகின. ஆனால், ரத்தன் டாட்டா தனது ஃபேவரைட் ஹீரோ. ஆனால், இந்த படம் ரத்தன் டாட்டா பயோபிக் இல்லை என இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் ட்வீட் போட்டு விளக்கம் கொடுத்திருந்தார். எந்த கதையாக இருந்தாலும், கலக்குவது கன்ஃபார்ம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X