என்னடா நடக்குது இங்க...அண்ணாச்சி பட அப்டேட் போட்டா சூர்யா ஃபேன்ஸ் ரீட்வீட் பண்ணுறாங்க
சென்னை : தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தின் அறிவிப்பை சூர்யா ஃபேன்ஸ் ரீட்வீட் செய்து, டேக் செய்து வருகிறார்கள். இது முதலில் அனைவரையும் குழம்ப வைத்தாலும், விஷயம் தெரிந்ததும் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.
லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் தி லெஜண்ட். ஜெடி- ஜெர்ரி இயக்கும் இந்த படத்தில் லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளதேலா, கீதிகா, விவேக், பிரபு உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சையின்ஸ் ஃபிக்சன் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஊர்வசி ரெளதேலா மைக்ரோபயோலஜிஸ்ட் ரோலில் நடத்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோவான அண்ணாச்சி
இது வரை தனது கடை விளம்பரங்களில் மட்டுமே பல்வேறு ஹீரோயின்களுடன் நடித்து வந்த அண்ணாச்சி, இந்த படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகிறார். விவேக் கடைசியாக நடித்த படம் என்பதாலும் இந்த படத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மே 20 ல் வருது வாடிவாசல்
தி லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக மொசலோ மொசலு பாடல் ஒரு மாதத்திற்கு முன் வெளியிடப்பட்டது. இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது சிங்கிளை படக்குழு வெளியிட உள்ளது. இது வாடிவாசல் என துவங்கும் செகண்ட் சிங்கிள் மே 20 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரீட்வீட் செய்யும் சூர்யா ஃபேன்ஸ்
இதனால் #VaadiVaasal என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டேக் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திடீரென வாடிவாசல் ஹேஷ்டேக்கை பார்த்ததும், இது சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திற்கானது என நினைத்து சூர்யா ஃபேன்ஸ் ரீட்வீட் செய்தும், டேக் செய்தும் வருகிறார்கள். இதை பார்த்த பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள். அண்ணாச்சி படத்தின் செகண்ட் சிங்கிளுக்கு எதற்காக சூர்யா ஃபேன்ஸ் இத்தனை ஆர்வம் காட்டி வருகிறார்கள் என கேட்டு வருகின்றனர்.

உங்க ஆர்வத்துக்கு ஒரு அளவு இல்லையா
வாடிவாசல் என்ற ஹேஷ்டேக்கை பார்த்ததும் சூர்யா ஃபேன்ஸ் இத்தனை குஷியாகி ஷேர் செய்கிறார்கள் என்றால் வாடிவாசல் படம் பற்றிய அப்டேட்டோ, படமோ வந்தால் எந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என நெட்டிசன்கள் ஆச்சரியமாக கேட்டுவருகிறார்கள். சூர்யா ஃபேன்ஸ் உங்க ஆர்வத்துக்கு ஒரு அளவில்லையா என கேட்டு கிண்டலும் செய்து வருகின்றனர். ஏற்கனவே கமலின் விக்ரம் படத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற தகவலால் சோஷியல் மீடியா முழுவதும் விக்ரம் படம் பற்றிய பேச்சாக தான் உள்ளது.


Click it and Unblock the Notifications











