சண்டையை ஸ்டார்ட் பண்ண சூர்யா ரசிகர்கள்.. முழுசா எல்சியூ உருவாகுமான்னே தெரியலையே.. என்ன ஆச்சு?

சென்னை: நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடிக்க நினைத்தாலும் அவர்களின் ரசிகர்கள் அதுக்கு பெரிய தடையாக மாறிவிடுவார்கள் என்பது சமீப காலமாக வெளிப்படையாகத் தெரிகிறது.

தளபதி 67 படம் எல்சியூவிற்குள் வர வேண்டும் என சில ரசிகர்களும், ஸ்டாண்ட் அலோன் படமாக வரவேண்டும் என பெருவாரியான விஜய் ரசிகர்களே விரும்பி வருகின்றனர்.

அதற்கு காரணம் விக்ரம் படத்தில் கடைசி சில நிமிடங்கள் வந்த சூர்யாவால் தான் படமே ஹிட்டாச்சு என சூர்யா ரசிகர்கள் டிரெண்ட் செய்தது தான். தளபதி 67 படம் தனிப்படமா? எல்சியூ படமா என்பது இன்னமும் கன்ஃபார்ம் ஆகாத நிலையில், #EmperorOfLCURolex என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து மீண்டும் சண்டையை ஸ்டார்ட் செய்துள்ளனர்.

எம்பரர் ஆஃப் எல்சியூ ரோலக்ஸ்

எம்பரர் ஆஃப் எல்சியூ ரோலக்ஸ்

#EmperorOfLCURolex என்கிற ஹாஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் தான் எல்சியூவிலேயே மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்ததாக கொண்டாடி மற்ற நடிகர்கள் எல்லாம் வேஸ்ட் என்பது போல டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மண்டையில ஏறுச்சா

ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சியான் விக்ரம் முதலில் நடிக்க இருந்ததாகவும் அவர் கால்ஷீட் கிடைக்காத நிலையில், சூர்யாவை புக் செய்தார் லோகேஷ் கனகராஜ் என தகவல்கள் வெளியான நிலையில், தளபதி 67 படத்தில் சியான் விக்ரம் ரோலக்ஸை மிஞ்சும் வில்லனாக வரவுள்ளதாக விக்ரம் ரசிகர்கள் கம்பு சுற்றி வரும் நிலையில், ரோலக்ஸ் தான் அல்டிமேட் மற்றவர்கள் எல்லாம் சப் டிவிஷன் என லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் பேசிய வீடியோவை ஷேர் செய்து சூர்யா ரசிகர்கள் மண்டையில ஏறுச்சா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

காலுக்கு கீழ தான்

"LCU யோட ராஜா டா.. இனி எவன் வந்தாலும் #EmperorOfLCURolex காலுக்கு கீழே தான்" என ட்வீட் போட்டு சூர்யா ரசிகர்கள் சண்டையை பெரிதாக்கி வருகின்றனர். கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்த விக்ரம் படத்தில் கேமியோவாக வந்த சூர்யாவின் கதாபாத்திரம் பேசப்பட்ட நிலையில், அது தான் பெரிய கதாபாத்திரம் என்றும் இனிமேல் அந்த யூனிவர்ஸில், விஜய், விக்ரம் என யார் இணைந்தாலும் அவர்கள் எல்லாருமே சூர்யாவின் காலுக்கு கீழ தான் என பதிவிட்டு வருவது பெரும் பிரச்சனையை கிளப்பி உள்ளது.

ரசிகர்கள் டார்ச்சர்

ரசிகர்கள் டார்ச்சர்

நல்ல படங்களையும், நாலைந்து நடிகர்கள் ஒன்றாக இணைந்து மல்டி ஸ்டார் படங்களையும் வெளிவர விடாமல் தடுப்பதையே இந்த ரசிகர்கள் ஆர்மி குறியாக வைத்து செயல்பட்டு வருவதாகவும், ரசிகர்களின் டார்ச்சர்களால் தான் ஹீரோக்கள் ரசிகர் படையை இழந்து விடக் கூடாது என்கிற அச்சத்தால் சோலோவாகவே படம் முழுக்க தங்களது தோளில் சுமந்து நடித்து வருவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர் என குற்றச்சாட்டுக்களை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

சூர்யாவின் ராஜாங்கம்

சூர்யாவின் ராஜாங்கம்

சூரரைப் போற்று, ஜெய்பீம் என சிறந்த படங்களை கொடுத்து வரும் சூர்யா ரோலக்ஸ் ஆக கடந்த ஆண்டு மிரட்டி இருந்தார். ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு தனியாக ஒரு படமும் உருவாக உள்ளது. சூர்யா 42 படம் வெளியானால் ஏகப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் நொறுங்கும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். கோலிவுட்டில் இப்போதைக்கு சூர்யாவின் ராஜாங்கம் தான் என சூர்யா ரசிகர்கள் பதிவிட்டு வருவது மற்ற முன்னணி நடிகர்கள் ரசிகர்களை செம கடுப்பாக்கி உள்ளது. ரசிகர்கள் சண்டை இல்லாமல் இருந்தால் நிறைய மல்டி ஸ்டாரர்கள் படங்கள் வரும். இப்படியெல்லாம் சண்டை போட்டால் அதன் பின்னர், எல்சியூவே சரியாக நிறைவடையுமா? என்பது சந்தேகம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X