»   »  இந்த விக்னேஷ் சிவனுக்கு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறதே வேலையாப் போச்சு

இந்த விக்னேஷ் சிவனுக்கு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறதே வேலையாப் போச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அர்ஜுன் ரெட்டி படத்தை பாராட்டிய இயக்குனர் விக்னேஷ் சிவன் சூர்யா ரசிகர்களிடம் வசமாக சிக்கியுள்ளார்.

விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை ரொம்ப நாளாக இயக்கி வருகிறார். அது குறித்து ஏதாவது அறிவிப்பு வராதா என்று சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி பற்றி ட்வீட்டினார் விக்கி.

சூப்பர் ஸ்டார்

#ArjunReddy அடுத்த ஆக்டிங் சூப்பர் ஸ்டார் ரெடி!

@DVijaySai அருமையாக நடித்துள்ளார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட்டினார் விக்னேஷ் சிவன்.

டிஎஸ்கே

தெலுங்கு படத்தை ஆதரிப்பது சரி. ஆனால் தயவு செய்து டிஎஸ்கே பற்றி ஏதாவது அப்டேட் கொடுங்க அண்ணா. காத்திருக்கிறோம் என்று சூர்யா ரசிகை ஒருவர் கேட்டுள்ளார்.

அப்டேட்

அண்ணா நீங்க டிஎஸ்கே அப்டேட் எதும் தரமாட்டீங்களா...தயவு செய்து ரசிகர்களை மதித்து ரிப்ளை செய்யுங்கள் அண்ணா PLZ 🙏🙏🙏🙏

ஒரு வருஷம்

என்ன தல நீ ஷூட்டிங் ஆரம்பிச்சு 1 வருஷம் ஆகப்போகுது சும்மா ஒரு டீஸர் அப்டேட் ஏதும் சொல்ல மாட்ற இன்னும் எவ்ளோ நாள் தான் ஆகும்.

கோபம்

கோபம்

பிற படங்களை பற்றி ட்வீட் பண்ண நேரம் இருக்கிறது ஆனால் தானா சேர்ந்த கூட்டம் பற்றி அப்டேட் போட மட்டும் நேரம் இல்லையா என்று சூர்யா ரசிகர்கள் விக்கியை தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Suriya fans are unhappy with Vignesh Shivan who tweets about other movies and not giving any update about TSK.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil