»   »  இன்னோவா காரை பரிசளித்த சூர்யா: எமோஷனல் ஆன அன்பான இயக்குனர் #TSK

இன்னோவா காரை பரிசளித்த சூர்யா: எமோஷனல் ஆன அன்பான இயக்குனர் #TSK

Posted By:
Subscribe to Oneindia Tamil
காரை பரிசளித்த சூர்யா! ஏன்? எதற்கு?- வீடியோ

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றி பெற்றதையடுத்து சூர்யா அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா காரை பரிசளித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த தானா சேர்ந்த கூட்டத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

படம் ஹிட்டானதால் சூர்யா மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

விக்கி

விக்கி

தானா சேர்ந்த கூட்டம் எனும் வெற்றிப் படத்தை கொடுத்த விக்னேஷ் சிவனுக்கு பரிசு கொடுக்க விரும்பினார் சூர்யா. இதையடுத்து சிவப்பு நிற டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரை பரிசளித்துள்ளார்.

மகிழ்ச்சி

சூர்யா தனக்கு கார் பரிசளித்தபோது எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம். இந்த அன்பான பரிசுக்கு நன்றி சூர்யா சார். வளர்ந்து வரும் என்னை ஊக்குவிக்க பெரிய மனது வேண்டும். இவ்வளவு அன்புக்கு தகுதியானவனா என்று தெரியவில்லை என்று ட்வீட்டியுள்ளார் விக்கி.

வைரல்

சூர்யாவிடம் இருந்து விக்கி கார் சாவியை பரிசாக பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர்.

சிங்கம் 3

சிங்கம் 3

சூர்யா தன்னை இயக்கிய இயக்குனருக்கு கார் பரிசளிப்பது புதிது அல்ல. முன்னதாக சிங்கம் 3 படம் வெளியான பிறகு இயக்குனர் ஹரிக்கு டொயோட்டா பார்ச்சுனர் கார் ஒன்றை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன்

ஹரிக்கு ஒரு கார், விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா, செல்வராகவனுக்கு என்னவோ என்று ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

English summary
Suriya has gifted a Toyota Innova car to director Vignesh Shivan for giving a hit movie named TSK. Suriya fans expect them to work again in the near future.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X