ஒருத்தரை ஒருத்தர் மனசை புரிஞ்சிக்கிட்டு வாழணும்.. ரசிகர் திருமணத்திற்கு போனில் வாழ்த்திய சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யா தனது ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில், போன் பண்ணி வாழ்த்தி உள்ளார்.

புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தாண்டி நடிகர் சூர்யா வாழ்க்கைக்கு தேவையான அட்வைஸ் சொன்னது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்ந்து தனது ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் நடிகர் சூர்யா இருந்து வருவதை அடிக்கடி பார்க்க முடிகிறது.

ரசிகர்கள் தான் முக்கியம்

ரசிகர்கள் தான் முக்கியம்

முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் ரசிகர்கள் தான் தங்களின் பலம் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட்டு வருவதாலே திரைத்துறையில் பல ஆண்டுகள் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக விளங்குகின்றனர். ரசிகர்கள் வீட்டின் சுக துக்க நிகழ்ச்சிகளில் அடிக்கடி ஸ்டார்டம்மையும் தாண்டி அவர்கள் பங்கேற்பது தான் ரசிகர்கள் மத்தியில் அவர்களது பிம்பத்தை மேலும் உயர்த்துகிறது.

ரசிகர் திருமணம்

ரசிகர் திருமணம்

நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணம் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில், நடிகர் சூர்யா ரசிகருக்கும் அவரது மனைவிக்கும் போன் போட்டு வாழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

மனசை புரிஞ்சிக்கிட்டு வாழணும்

மனசை புரிஞ்சிக்கிட்டு வாழணும்

வெளியூரில் படப்பிடிப்பில் இருப்பதால் திருமணத்திற்கு வர முடியவில்லை என்றும் அடுத்த மாதம் வந்து சந்திக்கிறேன் என போனில் மணமக்களிடம் பேசிய சூர்யா, ஒருத்தரை ஒருத்தர் மனசை புரிஞ்சிக்கிட்டு வாழணும், எந்த நேரத்திலும் பேசி எல்லாத்தையும் சமாளிக்கலாம் என வாழணும் என சூர்யா வாழ்த்துடன் சேர்த்து அட்வைஸும் கொடுத்திருந்தார்.

வாழ்க்கைக்கு தேவையான அட்வைஸ்

வாழ்க்கைக்கு தேவையான அட்வைஸ்

விவாகரத்து உள்ளிட்ட விஷயங்கள் சகஜமாக பெருகி வரும் சூழலில் நடிகர் சூர்யா வெறும் வாழ்த்துக்களை மட்டும் சொல்லாமல், அக்கறையுடன் கொடுத்த அட்வைஸ் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பேச்சுக்காக போன் பண்ணி வாழ்த்தாமல் இப்படி care எடுத்துக் கொண்டு பேசுறாரே சூர்யா என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

திருமணத்தில் சூர்யா

திருமணத்தில் சூர்யா

கடந்த ஆண்டு இதே போல ரசிகர் ஒருவரின் திருமணத்தில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வாழ்த்தி வருகின்றனர். சூர்யா 42 மற்றும் வாடிவாசல் அப்டேட்களை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X