மீண்டும் ஜோடி சேரும் சூர்யா – கீர்த்தி சுரேஷ்...டைரக்டர் யாருன்னு கேட்டா அசந்துடுவீங்க
சென்னை : திறமையான நடிகர்கள், அழகான ஜோடி என பெயர் வாங்கியவர்கள் சூர்யாவும், கீர்த்தி சுரேஷும். இவர்கள் இருவரும் இணைந்து 2018 ல் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படம் சூப்பர்ஹிட் பொழுதுபோக்கு படமாக அமைந்தது.
அந்த படத்தில் இவர்கள் இருவரிடையேயான காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கப்பட்டது. பாடல் காட்சிகளில் இவர்களின் ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது.

மீண்டும் இணையும் சூர்யா– கீர்த்தி சுரேஷ்
லேட்டஸ்ட் தகவலாக இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்க போவது வேறு யாரும் இல்லை. டைரக்டர் பாலா தானாம். 10 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா, பாலா இணையும் படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

பாலா படத்தை தயாரிக்கும் சூர்யா
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஃபார்முக்கு திரும்பி உள்ள டைரக்டர் பாலா, அடுத்தடுத்து 2 படங்களை இயக்க போவதாகவும், இதில் ஒரு படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளதாகவும் சமீபத்தில் கூறப்பட்டது. இந்த படத்தில் ஹீரோவாக அதர்வாவும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் நடிக்க போவதாக கூறப்பட்டது.

சூர்யாவுக்கு பிரேக் கொடுத்த பாலா
சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய பிரேக் கொடுத்தவர் டைரக்டர் பாலா. பாலா இயக்கிய நந்தா படம் சூர்யாவிற்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து விக்ரம், சூர்யாவை வைத்து பாலா இயக்கிய பிதாமகன் படமும் சூர்யாவின் நடிப்பு திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

பாலா மீது பாசம்
பாலாவுடன் இணைந்து பணியாற்றிய இரு படங்களுமே வெற்றி படங்களாக அமைந்ததால் பாலா மீது சூர்யாவிற்கு எப்போதுமே தனிப்பாசம் உண்டு. இதன் காரணமாக ஆர்யா, விஷாலை வைத்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் சூர்யா, நடிகர் சூர்யாவாகவே சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

2 படத்திலும் கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. அதர்வாவை வைத்து பாலா இயக்க போகும் படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாக கூறினார்கள். தற்போது பாலா இயக்கும் மற்றொரு படத்திலும் அவர் தான் ஹீரோயினாக நடிக்க போகிறாராம்.

எப்போ ஷுட்டிங்
இந்த படத்தின் ஷுட்டிங், இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட உள்ளதாம். அதற்கு முன் படம் குறித்த முழு தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம். சூர்யா, கீர்த்தி சுரேஷ் இருவரும் தற்போது மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் தான் அவற்றை முடித்த பிறகு பாலா படத்தை துவக்க திட்டமிட்டுள்ளனராம்.

இருவருமே பிஸி
சூர்யா தற்போது டி.ஜி.ஞானவேல் இயக்கும் ஜெய் பீம், பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதே போல் கீர்த்தி சுரேஷும் ரஜினி நடிக்கும் அண்ணாத்த, மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்ட, செல்வராகவனுடன் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











