இதுலையும் சூர்யா தான் நம்பர் ஒன்...ஒரே ஒரு போட்டோவால் எங்கேயோ போயிட்டாரே

சென்னை : கோலிவுட்டிலேயே தற்போது அதிகமாக பேசப்படும், கொண்டாடப்படும் ஹீரோ ஆகி விட்டார் சூர்யா. சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என வரிசையாக ஹிட் கொடுத்து திரும்பி பார்க்க வைத்து வருகிறார் சூர்யா.

Recommended Video

Surya | Madhavan-னை பார்த்து திகைத்து போன Suriya | Rocketary *TamilNadu | Oneindia Tamil

எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். இவரின் அடுத்தடுத்த படங்களும் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டி வருகின்றன.

அனைவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்துக் கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராத விதமாக விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அதிர வைத்தார்.

இப்படி சர்ப்ரைஸ் கொடுக்குறீங்களே

இப்படி சர்ப்ரைஸ் கொடுக்குறீங்களே

வெறும் 5 நிமிடங்கள் நடித்த சூர்யாவின் ரோலக்ஸ் ரோலை ரசிகர்கள் வாய் ஓயாமல் கொண்டாடி வருகின்றனர். இது பற்றி ரசிகர்கள் பேசி முடிப்பதற்குள் விக்ரம் 3, கைதி 2 படங்கள் பற்றி கமலும், லோகேஷ் கனகராஜும் மாறி மாறி தகவல் வெளியிட்டு, எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றனர்.

இதெல்லாம் எப்போ நடந்தது

இதெல்லாம் எப்போ நடந்தது

ஆனால் ரோலக்ஸ் ரோலால் சூர்யா மிகப் பெரிய மைல்கல்லை கடந்துள்ளார். இதிலும் சூர்யா தான் நம்பர் ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதெல்லாம் எப்போ நடந்தது, சொல்லவேயில்லையே. ஒரு போட்டோவை போட்டு சூர்யா ரேஞ்சு எங்கேயோ போய் விட்டதே என ஆச்சரியாக கூறி வருகின்றனர்.

ரோலக்சிற்கு ரோலக்ஸ் வாட்ச்

ரோலக்சிற்கு ரோலக்ஸ் வாட்ச்

படங்களில் மட்டுமல்ல சோஷியல் மீடியாவில் படுஆக்டிவாக இருக்கக் கூடியவர் சூர்யா. தனது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல படங்கள் தொடர்பான விஷயங்களையும் அடிக்கடி சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படி சமீபத்தில் விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக சூர்யாவின் வீட்டிற்கே சென்ற கமல், ரோலக்ஸ் வாட்ச் பரிசாக வழங்கினார்.

ஒரு போஸ்ட்டுக்கு இத்தனை லைக்கா

ஒரு போஸ்ட்டுக்கு இத்தனை லைக்கா

கமல் - சூர்யாவின் இந்த சந்திப்பு போட்டோக்களை சூர்யா தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். சூர்யாவின் இந்த போஸ்ட் மட்டும் 2 மில்லியன் லைக்குகளை இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ளது. தென்னிந்திய நடிகர்களிலேயே இப்படி யாருக்கும் கிடைத்தது கிடையாதாம். ஒரு போஸ்டிற்கு 2 மில்லியன் லைக்ஸ் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் சூர்யா தானாம்.

சூர்யா தான் நம்பர் ஒன்னா

சூர்யா தான் நம்பர் ஒன்னா

அது மட்டுமல்ல சூர்யா போட்ட இந்த போஸ்டால் அவரின் ஃபாலோவர்களின் எண்ணிக்கையும் 4.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. விக்ரமில் சூர்யா நடித்த 10 நிமிட ரோலக்ஸ் காட்சி சூர்யாவிற்கு இவ்வளவு பெரிய கெளரவத்தை தந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் போன்றோர் நடித்ிருந்தாலும் சூர்யா நடித்த 10 நிமிட காட்சிக்கு தான் அவருக்கு காஸ்ட்லி வாட்ச்சை கமல் பரிசாக தந்துள்ளார்.

இன்னும் நிறைய சம்பவம் இருக்கா

இன்னும் நிறைய சம்பவம் இருக்கா

விக்ரம் படத்தை தொடர்ந்து மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி படத்திலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தற்போது சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தில் சூர்யா, ஜோதிகா இருவரும் சிறிய ரோல் பண்ண போகிறார்களாம். இதே போல் இந்தியில் அக்ஷய் குமார் நடிக்கும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் சூர்யா கெஸ்ட் ரோல் பண்ண போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X