Don't Miss!
- Sports
உலககோப்பை ஹாக்கி - வெளியேறியது இந்தியா.. பெனால்டி சூட் அவுட்டில் நியூசியிடம் தோல்வி.. சோகம்
- News
என் தொகுதியில் ரோடு சூப்பரா இருக்கு..விபத்துக்கு காரணமே இதுதான்..ம.பி பாஜக எம்எல்ஏ சொல்றதை கேளுங்க
- Finance
முதலீடு செய்யும் இந்த 5 தவறை செய்யுறீங்களா.. இது உங்களுக்கு தான் பிரச்சனை!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
என்ன மனுஷன்ய்யா இவரு...வைர பரிசை திருப்பிக் கொடுத்த சூர்யா...யாருக்கு தெரியுமா?
சென்னை : கொம்பன் பட டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படம். இந்த படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்திருந்தது.
Recommended Video
கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ச சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி கலந்த படமாக விருமன் உருவாக்கப்பட்டது.
'விருமன்' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவை சேர்ந்த அனைவருக்கும் படத்தின் விநியோகஸ்தர் சக்திவேலன் பரிசு வழங்கி கெளரவித்தார்.
ஜோதிகா இல்லனா இந்த வெற்றி சாத்தியமே இல்லை.. விருமன் சக்சஸ் மீட்டில் புகழ்ந்து தள்ளிய சூர்யா!

விருமன் வெற்றியை கொண்டாடிய டீம்
'விருமன்' படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைரக்காப்பினை பரிசாக அளித்தார்.

வைரம் பரிசளித்த விநியோகஸ்தர்
படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கினார்.விருமன் படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்தார்.

பரிசை திருப்பி தந்த சூர்யா
சூர்யாவிற்கு, சக்திவேலன் கையில் வைர காப்பை அணிவிக்க வந்த போது முதலில் சூர்யா அதை வாங்க மறுத்து விட்டார். ஆனால் சக்திவேலன் வற்புறுத்தி சூர்யாவின் கையில் வைர காப்பை போட்டு விட்டார். ஆனால் அடுத்த நிமிடமே, நீங்கள் எனக்கு பரசு தந்தீர்கள். பதிலுக்கு நானும் உங்களுக்கு பரிசு தருகிறேன் என சொல்லி அந்த வைர காப்பை விநியோகஸ்தரின் கையில் மாட்டி விட்டார் சூர்யா.

என்ன மனுஷன்ய்யா இவரு?
சூர்யா செய்த இந்த செயலின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதற்காக ரசிகர்கள் சூர்யாவை பாராட்டி வருகின்றனர். அதோடு உங்களின் ரசிகனாய் இருப்பதில் பெருமைப்படுகிறோம் என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.வருகிற காஸ்ட்லி பரிசை கூட தன்னடக்கம் மற்றும் பெருந்தன்மையுடன் திருப்பி கொடுக்க நல்ல மனசு வேணும் சார். அது உங்க கிட்ட அண்ணா என தெரிவித்துள்ளனர்.

விருமன் வசூல் சாதனை
விருமன் படம் கடந்த 6 நாட்களில் உலகம் முழுவதும் 42.64 கோடியையும், தமிழகத்தில் மட்டும் 37.04 கோடியையும் பெற்றுள்ளது. 2022 ம் ஆண்டில் ரிலீசான படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் விருமன் 8வது இடத்தில் உள்ளது.

கமலையே மிஞ்சிட்டாரே
நடிகர் சூர்யா 'விக்ரம்' படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் விலையுயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசாக பெற்றிருந்தார். தற்போது 'விருமன்' படத்திற்காக விநியோகஸ்தர் சக்திவேலனிடமிருந்து வைர காப்பினை பரிசாக பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.விக்ரம் படத்திற்காக தயாரிப்பாளர் கமல், டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு காஸ்ட்லி கார் பரிசளித்தார். ஆனால் அவரையே மிஞ்சும் அளவிற்கு விருமன் விநியோகஸ்தர் படக்குழுவினருக்கு வைரத்தில் பரிசளித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.