»   »  இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இலவச மருத்துவ முகாம் நடத்தும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை

இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இலவச மருத்துவ முகாம் நடத்தும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை இன்று முதல் 3 நாட்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துகிறது.

வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த சென்னையில் தற்போது தான் இயல்வு வாழ்க்கை மெதுவாக திரும்பி வருகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் தேங்கியிருக்கும் நீர் மற்றும் குவிந்து கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை எத்திராஜ் கல்லூரியுடன் சேர்ந்து இலவச மருத்துவ முகாமை நடத்துகிறது. இன்று துவங்கியுள்ள முகாம் வரும் 9ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் மருத்துவ உதவியை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தினமும் காலை 9 மணி முதல் முகாம் நடைபெறும்.

தன்னார்வலர்களுக்கு டிடி ஊசிக்கு அகரம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Suriya's Agaram foundation is conducting free medical camp for the flood affected people of Chennai at Ethiraj college from today till december 9th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil