Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 3ல் அமைதிப் பேரணி.. கட்சி நிர்வாகிகளுக்கு திமுக அழைப்பு!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Finance
1000 பேரை கொத்தாகப் பணிநீக்கம் செய்தும் நிறுவனம்.. ஊழியர்கள் பீதி..!
- Lifestyle
உங்க கொழுப்பை குறைத்து...உடல் எடையை சீக்கிரம் குறைக்க நீங்க இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா போதுமாம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
எதற்கும் துணிந்தவன் பார்த்து விட்டு சூர்யா மகள் என்ன சொல்லிருக்கார் தெரியுமா ?
சென்னை : பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ம் தேதி ரிலீசானது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றள்ளது. பாசிடிவ் விமர்சனங்களை மட்டுமே இந்த படம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விமர்சகர்களும் கூட சூர்யா, பிரியங்கா அருள்மோகன் ஆகியோரின் நடிப்பை பாராட்டி உள்ளனர். எதற்கும் துணிந்தவன் படத்தை போலீசாரே ப்ரொமோட் செய்வதாக கூறியதாக கூட எதற்கும் துணிந்தவன் டீம் ட்விட்டர் ஸ்பேசில் பேசிய போது கூறியது. ஆபாச வீடியோக்களை எதிர்கொள்ள சூர்யா-பிரியங்கா பேசும் அந்த சீனை பலரும் பாராட்டியதாக கூறினர்.
பழைய
ஜோடிக்கு
மீண்டும்
கொக்கி
போடும்
ஒல்லி
நடிகை..
கம்பேக்
கொடுத்த
நிலையில்
கர்ச்சீப்
போடுறாராம்!

கமர்ஷியல் ஹிட் படம்
சில எதிர்ப்புக்களை சந்தித்தாலும், கமர்ஷியல் ரீதியாக ஹிட் அடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள், கதைகள், அவரின் கேரக்டர் பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடுத்து என்ன படம்
எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து கமிட்டான படங்களில் பிஸியாக நடிக்க துவங்கி விட்டார் சூர்யா. பாலா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வரும் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் ஒரே சமயத்தில் நடிக்க போவதாக அவரே கூறி உள்ளார். இதற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க கதை முன்பே ஓகே ஆகி விட்டதாகவும் சூர்யா கூறி இருந்தார்.

சூர்யா மகள் என்ன சொல்லிருக்கார்
எதற்கும் துணிந்தவன் படத்தை பார்த்து விட்டு அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என சூர்யாவிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, தன் மகள் தியா படத்தை பார்த்து விட்டு என்னுடைய நடிப்பையும், என்னுடைய ரோலையும் ரொம்பவே பாராட்டினார். சமீபத்தில் வெளியான எனது படங்களில் சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களின் வரிசையில் இந்த படத்தை வைப்பதாக கூறினார்.

இப்படி ஒரு அவதாரமா
இதே போல் எனது மகன் தேவ்வும் கூட இந்த படம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக கூறினார். கெட்டவர்களுக்கு எதிராக இப்படி ஒரு கோபமான அவதாரம் நான் எடுத்து இதுவரை பார்த்ததில்லை என்றார். எதற்கும் துணிந்தவன் அனைவரையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபீசிலும் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் சூர்யா.