Don't Miss!
- News
வடமாநிலத்தவர்களே தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள்.. நாம் தமிழர் சீமான் பரபரப்பு
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Finance
வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
“எதற்கும் துணிந்தவன் “ படத்தை பார்த்து சூர்யாவின் மகள் சொன்ன தகவல்.. நெகிழ்ந்து போன ஜோதிகா!
சென்னை : எதற்கும் துணிந்தவன் படத்தை பார்த்துவிட்டு சூர்யாவின் மகள் சொன்ன தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியராஜ் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் உருவானத் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக திரையரங்குகளில் வெளியானது.
மகனின் விவாகரத்து முடிவு... பொங்கிய பாக்கியலட்சுமி... அலறிய கோபி!

எதற்கும் துணிந்தவன்
சூர்யாவின் 40வது திரைப்படமான எதற்கும் துணிந்தவன், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யாவின் காப்பான் படத்திற்கு பிறகு திரையரங்குகளில் வெளியான படம் எதற்கும் துணிந்தவனாகும். சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகின. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியானதால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

பொள்ளாச்சி சம்பவம்
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட படம் என்பதால் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில், பாஸிட்டிவான விமர்சனத்தை பெற்று வருகிறது. பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், பெண்கள் சமூதாயத்திற்காக பயந்து தங்களின் உயிரை இழந்துவிடக்கூடாது, துணிந்து எதிர்த்து போராட வேண்டும் என்ற கருத்தை முன்நிறுத்தி உள்ளது இத்திரைப்படம்.

பக்கா கமர்ஷியல் படம்
இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொண்வண்ணன், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக ரிலீசான இப்படத்தை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

நெகிழ்ந்த ஜோ
இந்நிலையில் சமீபடத்தில் பேட்டி அளித்த சூர்யா, இந்த படத்தை பார்த்த என் மகள் தியா, படம் நன்றாக இருப்பதாகவும், பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படம் உள்ளதாகவும், குறிப்பாக கண்ணபிரான் கதாபாத்திரம் தனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. சூரரைப்போற்று, ஜெய்பீம் படத்தைப்போல இந்த திரைப்படமும் எனக்கு பிடித்த படமாகிவிட்டது என்று கூறியுள்ளார். அதே போல மகன் தேவ், இப்படி ஒரு ரோலை நான் எதிர்பார்க்கவே இல்லை கூறியுள்ளார். மகன்,மகள் என்னை புகழ்ந்ததைப் பார்த்து ‘ஜோ‘ அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார் என்று சூர்யா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.