சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்... ஃபஸ்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா ?

சென்னை : டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் காரைக்குடியில் நடைபெற்றது. 51 நாட்கள் நடைபெற்ற இந்த ஷுட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது.

படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க டைரக்டர் பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் முழுமூச்சில் நடத்தப்பட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் தியேட்டரில் ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இறுதிக்கட்ட ஷுட்டிங்

இறுதிக்கட்ட ஷுட்டிங்

இதனால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஈசிஆர்.,ல் இந்த ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. கிராமத்து பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டு வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் அடுத்தக்கட்ட ஷுட்டிங் செப்டம்பர் 13 ம் தேதி குற்றாலம், தென்காசி பகுதிகளில் துவங்கப்பட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

 தென்காசி ஷுட்டிங்

தென்காசி ஷுட்டிங்

தென்காசியில் நடத்தப்பட உள்ள ஷுட்டிங் தான் இறுதிக்கட்ட படப்பிடிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. மிக சிறிய பகுதி மட்டுமே இங்கு படமாக்கப்பட உள்ளதாம். செப்டம்பர் மாதத்துடன் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக படத்தின் ஃபஸ்ட் சிங்கிளை எப்போது வெளியிடலாம் என படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.

ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி

ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி

லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவலின்படி, எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளை ஆயுத பூஜை நாளான அக்டோபர் 14 அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இது தான் கதையா

இது தான் கதையா

கிராமத்து கதையில் சமூக மெசேஜையும் சேர்த்து இந்த படத்தில் சொல்லி உள்ளார்களாம். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களை பாதுகாக்கும் யதார்த்த ஹீரோ கேரக்டரில் தான் சூர்யா நடித்துள்ளதாகவும் ஏற்கனவே கூறப்பட்டது.

இவங்களும் நடிக்கிறாங்க

இவங்களும் நடிக்கிறாங்க


இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். வினய் ராய் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாராம். இவர்களுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு, டைகர் தங்கதுரை, குக்வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X